» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்கா-தென் கொரியா கூட்டுப் பயிற்சி எதிரொலி: வடகொரியா ஏவுகணை சோதனை

வெள்ளி 17, மே 2024 5:24:05 PM (IST)

அமெரிக்கா - தென் கொரியாவின் கூட்டுப் பயிற்சியை தொடர்ந்து வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை நடத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐ.நா.வின் தொடர் எச்சரிக்கைகளை மீறி வடகொரியா பல்வேறு ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை நிகழ்த்தி வருகிறது. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

அதே சமயம் அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து அவ்வப்போது கூட்டு ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் நேற்றைய தினம் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் ராணுவத்தினர் இணைந்து சக்திவாய்ந்த போர்விமானங்களை பறக்கவிட்டு கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்று வடகொரியாவின் கிழக்கு கரையில் இருந்து வடகொரிய ராணுவத்தினர் சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளனர். அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டுப் பயிற்சிகளால் தங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வடகொரிய அரசு கூறி வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory