» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சுலோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு : பிரதமர் மோடி கண்டனம்

வியாழன் 16, மே 2024 4:50:54 PM (IST)

சுலோவாக்கியா நாட்டின் பிரதமர் ராபர்ட் பிகோ மீது தாக்குதல் நடத்தியுள்ளதற்கு, பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுலோவாக்கியா நாட்டின் பிரதமராக ராபர்ட் பிகோ உள்ளார். தலைநகர் பிரஸ்டில்லா நகரின் வடகிழக்கே ஹேண்ட்லோவா என்ற இடத்தில், நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று விட்டு வீடு திரும்பினர். அப்போது மர்ம நபர் பிரதமர் ராபர்ட் பிகோ மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் படுகாயமடைந்து கீழே விழுந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுலோவாக்கியா நாட்டின் பிரதமர் ராபர்ட் பிகோ மீது தாக்குதல் நடத்தியுள்ளதற்கு, பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராபர்ட் பிகோ மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் கண்டனத்துக்குரியது.

இது கோழைத்தனமான தாக்குதல். இந்த கொடூர செயலை வன்மையாக கண்டிக்கிறேன். ராபர்ட் விரைவில் குணம் அடைய வேண்டும். சுலோவாக்கியா நாட்டு மக்களுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






New Shape Tailors

Arputham Hospital



Thoothukudi Business Directory