» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சிறையில் மனைவியின் உணவில் கொடிய ரசாயனம் கலப்பு : இம்ரான் கான் புகார்

சனி 20, ஏப்ரல் 2024 12:00:12 PM (IST)

சிறையில் உள்ள தனது மனைவிக்கு, கொடிய ரசாயனம் கலந்த உணவு வழங்கப்பட்டதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.

இம்ரான் கான் பாகிஸ்தானில் பல்வேறு வழக்குகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் அரசியல்வாதியுமான இம்ரான் கான், அடியலா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஊழல் வழக்கு விசாரணையின்போது, ராவல்பிண்டி நீதிமன்றத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறையில் உள்ள புஷ்ராவுக்கு ஷிஃபா சர்வதேச மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ள மருத்தவர் பரிந்துரைத்தபோதும், பாகிஸ்தான் அரசு மருத்துவமனையில்தான் பரிசோதனை செய்ய வேண்டும் என சிறைத் துறை நிர்வாகம் கெடுபிடி காட்டுகிறது.

முன்னதாக, தனக்கு உணவில் விஷம் வைக்கப்பட்டதா என்பதை பரிசோதிக்குமாறு புஷ்ரா, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இவர் சட்டத்தை மீறி இம்ரான் கானை திருமணம் செய்துகொண்டதாகவும், ஊழல் வழக்கின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory