» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜப்பானில் மனிதர்களை காக்க கரடிகளை அழிக்க அனுமதி: அரசு அதிரடி அறிவிப்பு

புதன் 17, ஏப்ரல் 2024 4:35:38 PM (IST)

ஜப்பானில் கரடிகளை அழிக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. கரடிகளை அழிப்பதற்காக மானியம் வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

ஜப்பான் நாட்டில், அரசு மானியத்தின் உதவியுடன் வேட்டையாடக்கூடிய விலங்குகளின் பட்டியலில் கரடிகளையும் சேர்த்துள்ளது. கரடிகளின் எண்ணிக்கை பெருகி, மனிதர்களை தாக்கும் சம்பவம் அதிகரித்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஜப்பானில் உள்ள ஷிகோகு பகுதியைச் சேர்ந்த கருப்பு கரடிகளைத் தவிர, பிற கரடிகள் 'வனவிலங்கு மேலாண்மை' பட்டியலில் சேர்க்கப்படும் என ஜப்பான் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. கருப்பு கரடிகளின் எண்ணிக்கை பெருகவில்லை என்பதால் இந்த பட்டியலில் சேர்க்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழுப்பு நிற கரடிகள் வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோவில் வாழ்கின்றன. ஆசிய கருப்பு கரடிகள் நாட்டின் 47 மாகாணங்களில் 33 மாநிலங்களில் வாழ்கின்றன, அவற்றின் எண்ணிக்கை மற்றும் வாழ்விடங்கள் பல பகுதிகளில் அதிகரிக்கின்றன. கரடி தாக்குதல் சம்பவங்கள் அதிகரிக்கும்போது, இலையுதிர் காலத்தில் கரடிகளை அழிப்பதற்காக அரசு மானியங்களை வழங்க தொடங்கும் என சுற்றுச்சூழல் துறை மந்திரி தெரிவித்தார்.

ஜப்பான் சுற்றுச்சூழல் அமைச்சக தகவலின்படி, 2023-ம் நிதியாண்டில் 19 மாகாணங்களில் கரடிகள் தாக்கியதில் 219 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2006-ல் கரடி தாக்குதல் விவரங்கள் பதிவு செய்யப்பட்டதில் இருந்து அதிகபட்ச பாதிப்பு ஆகும்.


மக்கள் கருத்து

கரடி சங்க தலைவர்Apr 18, 2024 - 06:35:50 PM | Posted IP 172.7*****

நண்பர்களே எல்லாரும் ஓடுங்க. அந்த ஆபத்தான மிருகம்(மனிதன்) நம்மை நோக்கி தான் வருது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory