» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆபாச டீப்பேக் வீடியோக்கள்: 1 லட்சம் யூரோ இழப்பீடு கோரி இத்தாலி பிரதமர் வழக்கு!

வியாழன் 21, மார்ச் 2024 4:46:24 PM (IST)

டீப்பேக் தொழில் நுட்பம் மூலம் தனது படத்தை ஆபாசமாக  சித்தரித்து வெளியட்டவர் மீது 1 லட்சம் யூரோக்கள் இழப்பீடாக வழங்க உத்தரவிடக்கோரி இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வழக்கு தொடர்ந்துள்ளார். 

இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் முகத்தை, ஆபாச திரைப்படத்தில் உள்ள நடிகையின் உடலுடன் பொருத்தி வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது.
நவீன உலகம் பெருமையாக பேசிக்கொள்ளும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் அதன் எதிர்விளைவுகள் டிஜிட்டல் துறையில் அதிகரித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பொழுதுபோக்கு அம்சங்களில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். 

டீப்பேக் என்ற ஏ.ஐ. வீடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒருவரின் முகத்தை வேறு ஒருவரின் உடலோடு பொருத்தி வீடியோ வெளியிடுவது அதிகரித்து வருகிறது. அவ்வகையில், இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் டீப்பேக் வீடியோக்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஜார்ஜியா மெலோனியின் முகத்தை, ஆபாச திரைப்படத்தில் உள்ள நடிகையின் உடலுடன் பொருத்தி ஆபாச வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது. அந்த வீடியோக்கள் வைரலான நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், 40 வயது நிரம்பிய நபர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் இந்த வீடியோக்களை தயாரித்து வலைத்தளத்தில் பதிவேற்றியது தெரியவந்துள்ளது. 

அவர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. மெலோனி சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்கள் அனைத்தும், 2022ல் அவர் பிரதமராக பதவியேற்பதற்கு முன்பு பதிவேற்றம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலிய சட்டத்தின்படி, ஒருசில அவதூறு செயல்கள் கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இந்நிலையில், ஆபாச வீடியோக்கள் வெளியிட்டதால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு 1 லட்சம் யூரோக்கள் இழப்பீடாக வழங்க உத்தரவிடக்கோரி பிரதமர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரதமர் மெலோனி ஜூலை 2-ம் தேதி சசாரி கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உள்ளார். பிரதமர் கோரிய இழப்பீடு வழங்கப்பட்டால், ஆண்களின் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் அந்த தொகையை நன்கொடையாக வழங்குவார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதுபோன்ற பிரச்சினையால் பாதிக்கப்படும் பெண்கள், வழக்கு தொடர பயப்படவேண்டாம் என்ற செய்தியை தெரியப்படுத்தவே இழப்பீடு கேட்டு பிரதமர் மெலோனி வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் இந்தியாவில், ரஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைப், நோரா பதேஹி உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களின் டீப்பேக் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory