» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இறைதூதரை அவமதித்ததாக இளைஞருக்கு மரண தண்டனை: பாக். நீதிமன்றம் தீர்ப்பு

சனி 9, மார்ச் 2024 5:17:40 PM (IST)

பாகிஸ்தானில் இறைதூதரை அவமதித்ததாக 22 வயது இளைஞருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், 17 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் இஸ்லாமிய மதக்கடவுள் குறித்து, மதக்கடவுளின் இறைதூதர் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்தால், அவமதித்தால் மற்றும் மத நிந்தனையில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக்கும் வகையிலான சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவன் இஸ்லாமிய மதக்கடவுளின் இறைதூதர் குறித்து அவதூறு கருத்துகள் இடம்பெற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார். 

அதை 17 வயதான சிறுவனும் பகிர்ந்துள்ளான். 2022ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பஞ்சாப் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இறைதூதர் குறித்து அவதூறு கருத்துகள் இடம்பெற்றிருந்த புகைப்படங்கள், வீடியோக்களை வாட்ஸ் அப்பில் பகிர்ந்த வழக்கில் 22 வயது இளைஞருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேபோல், 17 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

truthMar 11, 2024 - 04:02:26 AM | Posted IP 172.7*****

stupid country and its judicial system. people are killing each other in the name of fake religions.

atheistMar 9, 2024 - 05:29:40 PM | Posted IP 172.7*****

அது எல்லாம் தூதர் பார்த்துக்குவார், உயிரை எடுக்க மக்களுக்கு உரிமை இல்லை, பாகிஸ்தான் ஒரு முட்டாள் நாடு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory