» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அனல்மின் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து: ரஷியாவில் அவசரநிலை பிரகடனம்

வியாழன் 7, மார்ச் 2024 8:34:18 AM (IST)


ரஷியாவில் உள்ள அனல்மின் நிலையத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ரஷியாவின் தெற்கு மாகாணமான துவாவின் சாகேனர் நகரில் அனல்மின்நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நாட்டின் மின்சார தேவை மற்றும் சூடுதண்ணீர் தேவைக்காக இந்த அனல்மின் நிலையம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அனல்மின் நிலையத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் அதீத உராய்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று அனல்மின் நிலையத்தில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து நிகழ்ந்தது.

இதன்காரணமாக அனல்மின் நிலையம் தீப்பிடித்து மளமளவென எரியதொடங்கியது. இதனால் அப்பகுதியில் கரும்புகை மேலெழும்பி வானில் பரவ தொடங்கியது. இதனையடுத்து பொதுமக்கள் பீதி அடைந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ரசாயன கலவையை தெளித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அனல்மின் நிலையத்தில் உள்ள பாய்லர் ஏதும் வெடிக்காத காரணத்தினால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 23 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 9 பேர் உயிருக்கு ஆபத்தானநிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு அனல்மின் நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து 4 ஆயிரம் பொதுமக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து பொது நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory