» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்: வருத்தம் தெரிவித்தது மெட்டா நிறுவனம்!

புதன் 6, மார்ச் 2024 11:02:49 AM (IST)

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியதால் மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

உலகின் முன்னணி சமூக வலைதளங்களாக விளங்குபவை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம். மெட்டா நிறுவனத்தின் கீழ் செயல்படும் இந்த வலைதளங்கள் நேற்று இரவில் திடீரென முடங்கின. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்பற்று இருந்தன. உலகம் முழுவதும் இந்த தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக தெரியவந்தது.

சைபர் கிரைம் ஹேக்கர்களின் கைவரிசையால் இந்த தடை ஏற்பட்டதா அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயல்பாடு துண்டிக்கப்பட்டதா என்பது பற்றி உடனடியாக எதுவும் தெரியவரவில்லை. மெட்டா நிறுவனமும் அதுகுறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. இதனால் இந்த வலைதளங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், உலகமே முடங்கியதுபோல தவிப்புக்கு ஆளானார்கள். நீண்ட நேரத்திற்கு பிறகு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. இதனால் சமூக வலைதளத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

இந்தநிலையில், தொழில்நுட்ப சிக்கலால், எங்களின் சில சேவைகளை அணுகுவதில் மக்கள் சிரமப்பட்டனர். நாங்கள் விரைவாக அந்த சிக்கலைத்தீர்த்து விட்டோம். மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம் என மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஆண்டிஸ்டோன் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory