» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பூமியின் மீது செயற்கைகோள் விழும் அபாயம்: ஐரோப்பா விண்வெளி நிறுவனம் தகவல்!

வியாழன் 22, பிப்ரவரி 2024 11:18:08 AM (IST)



செயலிழந்த செயற்கைகோள் பூமியில் விழும் அபாயம் உள்ளதாக ஐரோப்பா விண்வெளி நிறுவனம் அச்சம் தெரிவித்துள்ளது. 

கடந்த 1990-ம் ஆண்டில் ஓசோன் படலத்தை கண்காணிக்கும் வகையில் ஒரு செயற்கைகோளை ஐரோப்பா விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்ணில் செலுத்தியது. 'கிராண்ட்பாதர்' என பெயரிடப்பட்ட இந்த விண்கலனை ஐரோப்பா விண்வெளி நிறுவனம் கட்டுப்படுத்தி இயக்கி வந்தது. இதனையடுத்து அதன் ஆயுட்காலம் முடிவடைந்து தன்னுடைய சுற்றுப்பாதையை விட்டு விலகியது.

இந்தநிலையில் கிராண்ட்பாதர் செயற்கைகோளின் உடைந்த பாகங்கள் பூமியின் மீது விழும் அபாயம் உள்ளதாக ஐரோப்பா விண்வெளி நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாதம் இறுதிக்குள் அது பூமியில் விழலாம் என கணக்கீடப்பட்டு உள்ளது.

இதனை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் எங்கு விழும் என சொல்லமுடியவில்லை, இருப்பினும் ஐரோப்பாவில் உள்ள கடல்களில் விழ வைக்க முயற்சிகள் நடக்கின்றன. இதன் பெருமளவிலான பாகங்கள் எரிந்து சாம்பலாகிவிடும். ஆனால் சில பாகங்கள் வளிமண்டலத்தை தாண்டி பூமியில் விழும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors

Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory