» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வெளி நாடுகளின் நிலத்தை ஒரு இன்ச் கூட ஆக்கிரமிப்பு செய்யவில்லை: சீன அதிபர்
வெள்ளி 17, நவம்பர் 2023 12:03:56 PM (IST)
வெளி நாடுகளின் நிலத்தை ஒரு இன்ச் கூட ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

தைவான் நாட்டின் ஆட்சி அதிகாரம் தொடர்பாக சீனாவுக்கும் அந்நாட்டிற்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. தற்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர், ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மாநாட்டிற்கு இடையே அமெரிக்க- சீனா தொழில் கவுன்சில் மற்றும் அமெரிக்கா- சீனா உறவுக்கான கமிட்டி ஆகியவை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அருகில் உள்ள நாடுகளுடன் ஒரு பதற்றமான நிலை உருவாகி இருப்பது தொழில்துறைகளில் கவலை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஜி ஜின்பிங் பதில் அளிக்கையில் "சீனா மோதல் மற்றும் போரை தூண்டவில்லை. வெளிநாட்டு நிலத்தை சிங்கிள் இன்ச் கூட ஆக்கிரமிப்பு செய்யவில்லை" என்றார்.
ஜோ பைடன்- ஜி ஜின்பிங் சந்திப்பின்போது ஜோ பைடன், திபெத் மற்றும் ஹாங்காங்கின் மனித உரிமை துஷ்பிரயோகம் குறித்து தனது கவலையை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இத்தாலியில் மருத்துவமனையில் தீ விபத்து: 4 நோயாளிகள் உயிரிழப்பு
ஞாயிறு 10, டிசம்பர் 2023 10:52:46 AM (IST)

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 17 ஆயிரம் பேர் உயிரிழப்பு! 42 ஆயிரம் பேர் காயம்!
சனி 9, டிசம்பர் 2023 5:54:24 PM (IST)

ரஷியா அதிபா் தோ்தலில் மீண்டும் போட்டி விளாதிமீா் புதின் அறிவிப்பு!
சனி 9, டிசம்பர் 2023 10:25:30 AM (IST)

பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியம்: இஸ்ரேல் பிரதமருடன் ஜோ பைடன் பேச்சு!
வெள்ளி 8, டிசம்பர் 2023 11:34:21 AM (IST)

வடகொரிய பெண்கள் அதிக குழந்தைகளை பெற வேண்டும்: கண்ணீர் மல்க அதிபர் கோரிக்கை!
வியாழன் 7, டிசம்பர் 2023 11:51:21 AM (IST)

இன்ஸ்டாகிராம், பேஸ்புக் குறுஞ்செய்தி சேவை ரத்து : மெட்டா நிறுவனம் அறிவிப்பு!
புதன் 6, டிசம்பர் 2023 5:10:47 PM (IST)
