» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சிங்கப்பூர் அமைச்சர்கள், தொழிலதிபர்களுடன் முதல்வர் முக‌ ஸ்டாலின் ஆலோசனை

புதன் 24, மே 2023 11:24:15 AM (IST)சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் முன்னணி தொழிலதிபர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காகவும், சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளா்கள் மாநாட்டுக்கு தொழில் நிறுவனங்களின் அதிபா்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் சிங்கப்பூா், ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூருக்கு செவ்வாய்க்கிழமை சென்றடைந்தாா்.

இந்நிலையில், சிங்கப்பூர் அமைச்சர்கள், முன்னணி தொழில் நிறுவனமான டெமாசெக் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி திலன் பிள்ளை சந்திரசேகரா மற்றும் செம்கார்ப் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கிம்யின் ஒங் ஆகியோருடன்  இன்று காலை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர். மொத்தம் 9 நாள்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், சிங்கப்பூரை தொடர்ந்து ஜப்பான் நாட்டுக்கு செல்லவுள்ளார்.


மக்கள் கருத்து

இந்தியன்மே 24, 2023 - 01:31:19 PM | Posted IP 162.1*****

ஆங்கிலம் சரியாக தெரியாது இது போட்டோ சூட் ஆ ? அவங்க குடும்பத்துக்கு முதலீடா ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory