» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்திய தூதரக தாக்குதலுக்கு பதிலடி நிச்சயம்: இங்கி. வெளியுறவு அமைச்சர் பேச்சு

வெள்ளி 24, மார்ச் 2023 4:26:56 PM (IST)



லண்டனில் இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இங்கிலாந்து அரசு வலுவான பதிலடி கொடுக்கும் என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலானது. இதற்கு கண்டனம் தெரிவித்த, வெளியுறவு அமைச்சகம், இது குறித்து விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது. 

இதற்கு பதில் அளிக்கும் வகையில், டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம், தூதரின் இல்லம் முன் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புகள் அகற்றப்பட்டது. இந்நிலையில், இது குறித்து பேசிய இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி, ``இந்திய தூதரகத்தின் மீதான தாக்குதல் ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்த விவகாரத்தை அரசு மிகவும் தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது. இது போன்ற வன்முறைகளுக்கு இனிமேல் வலுவான பதிலடி கொடுக்கப்படும்,’’ என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து

வாய்லMar 24, 2023 - 07:51:21 PM | Posted IP 162.1*****

கைது பண்ணி நாடு கடத்தி விடுங்க... இந்தியாவுக்கு...

அங்குMar 24, 2023 - 05:46:44 PM | Posted IP 162.1*****

வெளிநாட்டில் வாழும் சில சீக்கியர்கள் எல்லாம் துட்டு முட்டாள்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory