» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து பின்லாந்து முதலிடம்: இந்தியா..?

செவ்வாய் 21, மார்ச் 2023 3:42:22 PM (IST)உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. 136 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியா 125வது இடத்தில் உள்ளது. 

உலகெங்கும் நேற்று சர்வதேச மகிழ்ச்சி தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. நிலையான வளர்ச்சி சொல்யூஷன் அமைப்பு மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதேபோல இந்தாண்டும் இந்த மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தெந்த நாடுகள் எங்கே இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

இந்தாண்டும் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் நார்டிக் நாடுகளில் ஒன்றான பின்லாந்து முதல் இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து ஆறாவது ஆண்டாகப் பின்லாந்து இந்தப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மக்களின் சராசரி வாழ்க்கை மதிப்பீடுகள் கருத்தில் கொண்டு இந்தப் பட்டியலை உருவாக்கியுள்ளனர். 150க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்களிடமிருந்து பல கருத்துகளைக் கேட்டு இந்தப் பட்டியலை உருவாக்கியுள்ளனர். Gallup World Poll உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பெறப்பட்டு இந்தப் பட்டியலை உருவாக்கியுள்ளனர்.

இந்த தரவரிசையில் கடந்த காலங்களைப் போல நார்டிக் நாடுகளே டாப் இடங்களில் உள்ளன. இதில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ள நிலையில், டென்மார்க் இரண்டாவது இடத்திலும் ஐஸ்லாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன. சமூகப் பாதுகாப்பு, வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம், தாராள மனப்பான்மை, ஊழல் இல்லாமை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்தப் பட்டியலை உருவாக்கியுள்ளனர். இந்த நார்டிக் நாடுகள் கொரோனா பாதிப்பைச் சிறப்பாகக் கையாண்டதாகப் பாராட்டியுள்ளனர். மேலும், ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நார்டிக் நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு கொரோனா உயிரிழப்பு மட்டுமே ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நான்காவது இடத்தில் இருக்கும் நிலையில் நெதர்லாந்து 5ஆவது இடத்திலும் சுவீடன் 6ஆவது இடத்திலும் உள்ளது. அதேபோல நார்வே, சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், நியூசிலாந்து ஆகிய நாடுகள் 7 முதல் 10 இடங்களில் உள்ளது. ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து, அமெரிக்கா நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக டாப் 20 நாடுகளில் குறிப்பிட்ட நாடுகளே இருக்கும். ஆனால், முதல்முறையாக இந்தப் பட்டியலில் லிதுவேனியா வந்துள்ளது. அது 20ஆவது இடத்தை பிடித்துள்ளது.

136 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியா 125வது இடத்தில் உள்ளது. அதாவது உலகிலேயே மிகக் குறைவான மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. அண்டை நாடுகளாக நேபாளம் (78ஆவது இடம்), சீனா (64ஆவது இடம்), வங்கதேசம் (118ஆவது இடம்), இலங்கை (112ஆவது இடம்), நாடுகளைக் காட்டிலும் இந்தியா பின்தங்கியுள்ளது. இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தான் உள்ளது.

இந்தாண்டு பட்டியல் டேட்டாவை தவிர மேலும் சிலவற்றை வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அறிக்கையின் இணை ஆசிரியர்களில் ஒருவரான லாரா அக்னின் கூறுகையில், "இந்த ஆண்டு அறிக்கை பல சுவாரஸ்யமான தகவல்களைக் கொண்டுள்ளது. முன்பின் தெரியாதவர்களுக்கு உதவுவது, தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிப்பது ஆகியவை அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு முன்பு எந்தளவுக்கு இது இருந்ததோ.. இப்போது அதே நிலையை அடைந்துள்ளது" என்றார்.

உக்ரைன் போர் காரணமாக இரு நாடுகளும் பட்டியலில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. கடந்தாண்டு தொடங்கிய உக்ரைன் போர் இன்னும் முடிவடையவில்லை. ஓராண்டிற்கும் மேலாகத் தொடர்கிறது. இதன் காரணமாக இந்த மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் ரஷ்யா 72ஆவது இடத்திற்கும் உக்ரைன் 92ஆவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பட்டியலில் கடைசிக்கட்டங்களில் பெரும்பாலும் வளர்ச்சியடையாத பின்தங்கிய நாடுகளே உள்ளன.


மக்கள் கருத்து

tamilanMar 22, 2023 - 03:50:12 PM | Posted IP 162.1*****

Indiyavai vida vangathesam, srilanka magilchiyil munnadi ullathu endru intha arikayil kooriirupathan moolam..ithu oru dubakur arikkai enbathu thelivagirathu....

தமிழன்Mar 22, 2023 - 01:06:52 PM | Posted IP 162.1*****

சமூகப் பாதுகாப்பு, வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம், தாராள மனப்பான்மை, ஊழல் இல்லாமை. இதில் தனி நபர் வருமானத்தில் மட்டும் இந்தியா முன்னேறியுள்ளது

hahaMar 22, 2023 - 04:20:02 AM | Posted IP 162.1*****

We are ahead of Afghanistan and Pakistan. Should be proud of ourselves.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory