» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உக்ரைனில் ரஷியா குண்டு வீச்சு: 30 குடியிருப்பு கட்டிடங்கள் சேதம், ஒருவர் உயிரிழப்பு!
வெள்ளி 17, மார்ச் 2023 12:17:09 PM (IST)

உக்ரைன் மீது ரஷிய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 30 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் நிலையில், இருதரப்பிலும் ஏராளமான உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகின்றன. இதனிடையே உக்ரைனின் உள்கட்டமைப்பை தகர்க்கும் நோக்கில் ரஷியா தொடர்ந்து தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் உக்ரைனில் உள்ள கோஸ்டியான்டினிவ்கா என்ற நகரத்தில் ரஷிய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் அந்நகரத்தில் உள்ள 30 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இதில் 50 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் படுகாயம் அடைந்தனர். குடியிருப்பு கட்டிடங்கள் மட்டுமின்றி ரெயில் நிலையங்கள், மார்கெட் மற்றும் தனியார் விடுதிகள் மீதும் ரஷிய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஷ்யாவை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ரூ.2,893 கோடிக்கு ஆயுதங்கள்: அமெரிக்கா முடிவு!
செவ்வாய் 21, மார்ச் 2023 5:23:22 PM (IST)

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து பின்லாந்து முதலிடம்: இந்தியா..?
செவ்வாய் 21, மார்ச் 2023 3:42:22 PM (IST)

கரோனா தரவுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை: சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
ஞாயிறு 19, மார்ச் 2023 8:04:38 PM (IST)

போர்க் குற்றத்தைப் புரிந்ததாக புதினுக்கு எதிராக பிடிவாரண்ட் : பைடன் வரவேற்பு
சனி 18, மார்ச் 2023 4:37:40 PM (IST)

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேர் விடுதலை
வெள்ளி 17, மார்ச் 2023 11:46:39 AM (IST)

அருணாசலபிரதேசம் இந்தியாவுக்கே சொந்தம்: அமெரிக்கா அங்கீகாரம்
வியாழன் 16, மார்ச் 2023 5:36:50 PM (IST)

இங்கMar 17, 2023 - 01:39:00 PM | Posted IP 162.1*****