» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இங்கிலாந்து மன்னர் முடிசூட்டு விழா 3நாட்கள் நடைபெறும்: பக்கிங்ஹாம் அரண்மனை

திங்கள் 23, ஜனவரி 2023 10:34:58 AM (IST)

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா 3 நாட்கள் காமன்வெல்த் நாடுகள் முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. 

நீண்டநாள் இங்கிலாந்து ராணியாக இருந்த ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலமானார். இதையடுத்து அவரது 74 வயது மகன் சார்லஸ் இங்கிலாந்து மன்னராக பொறுப்பு ஏற்று கொண்டார். இந்த நிலையில் அவரது முடிசூட்டு விழா குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை புதிய அறிவிப்பை வௌியிட்டுள்ளது.

3-ம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா இந்த ஆண்டு மே மாதம் 6-ம் தேதி முறைப்படி நடைபெற உள்ளது. சார்லசும், அவரது மனைவி கமீலாவும் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் முறைப்படி பதவி ஏற்று கொள்வார்கள். சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவையொட்டி காமன்வெல்த் நாடுகளில்  3 நாட்களுக்கு ஊர்வலங்களுடன் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மே 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, வின்ட்சர் கோட்டை மைதானத்தில், ‘தேசத்தை ஔிர செய்வோம்’ என்ற கருப்பெருளில், உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் பங்கேற்கும் பாரம்பரிய இசை, நடன, கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இவை நேரடி ஔிபரப்பு செய்யப்படும். இந்த தனித்துவமான வரலாற்று நிகழ்வு கொண்டாட்டங்களுக்கு உலகம் முழுவதுமிருந்து ஏராளமானோர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory