» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையில் விமானிகள் தொடர்ந்து ராஜினாமா: விமான நிறுவனத்துக்கு நெருக்கடி..!!

செவ்வாய் 29, நவம்பர் 2022 12:02:05 PM (IST)

இலங்கையில் விமானிகள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருவதால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பலர் வேலையிழந்ததுடன், வேலையில் இருப்பவர்களுக்கும் குறைவான சம்பளமே வழங்கப்பட்டு வருகிறது. இதில் இலங்கை அரசுக்கு செந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்சில் பணியாற்றும் விமானிகளும் சம்பள பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றனர். குறைந்த ஊதியம், வருமான வரி உயர்வு, டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற பிரச்சினைகளால் விமானிகள் பணியில் இருந்து ராஜினாமா செய்து வருகின்றனர்.

கரோனாவுக்கு முன்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்சில் 318 விமானிகள் பணியில் இருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 235 ஆக குறைந்து விட்டது. இது விமான நிறுவனத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்டு நுடாலும் கவலை தெரிவித்து உள்ளார். கொரோனாவுக்கு பின் இலங்கையின் சுற்றுலாத்துறை படிப்படியாக சீரடைந்து வரும் நிலையில், விமானிகளின் இந்த வெளியேறுதல் அரசுக்கு தலைவலியாக உருவெடுத்து இருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory