» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இருமல் மருந்து குடித்த 66 குழந்தைகள் பலி: இந்திய நிறுவனத்திடம் உலக சுகாதார அமைப்பு விசாரணை!

வியாழன் 6, அக்டோபர் 2022 10:20:42 AM (IST)மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்புக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நஞ்சுத் தன்மை கொண்ட தரமற்ற 4 இருமல் சிரப்கள்தான் காரணமா என்று உலக சுகாதார அமைப்பு விசாரித்து வருகிறது.

ஹரியாணாவின் சோனிபட்டை சேர்ந்த மெய்டென் மருந்தியல் நிறுவனம் தயாரித்த அந்த மருந்துகள் நச்சு தன்மை வாய்ந்த ரசாயனங்களைக் கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. புரோமெத்தசைன் வாய்வழி மருந்து, கோஃபெக்ஸ்மாலின் பேபி இருமல் சிரப், மகாஃப் பேபி இருமல் சிரப், மேக்ரிப் என் இருமல் சிரப் ஆகிய நான்கு மருந்துகளும் இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை என உலக சுகாதார அமைப்பு மருந்து பொருள்கள் எச்சரிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. 

உலக சுகாதார அமைப்பு இது குறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள தொடர்பதிவுகளில், "நச்சுத்தன்மைக் கொண்ட இந்த 4 இருமல் மருந்துகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காம்பியா நாட்டில் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் 66-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்கு இம்மருந்துடனான தொடர்பு கண்டறியப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நச்சுத்தன்மைக்கொண்ட மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்க நாட்டிற்கும் வெளியிலும் பரவியிருக்கலாம் என எச்சரிக்கை தெரிவித்துள்ள சுகாதார நிறுவனம் இம்மருந்து பொருள்களின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் எவ்வித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை தெரிவித்துள்ளது.

மேலும், ஆய்வு முடிவுகளில் டை எத்திலீன் கிளைக்கால் மற்றும் எத்திலீன் கிளைக்கால் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இவ்விரு வேதியியல் பொருள்களை மனிதர்கள் பயன்படுத்தும் போது உயிரிழிப்புக்கு காரணமாகும் என அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory