» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ட்விட்டர் இணையதளத்தில் ‘எடிட் வசதி: கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் அறிமுகம்
புதன் 5, அக்டோபர் 2022 10:28:25 AM (IST)
ட்விட்டர் இணையதளத்தில் ‘எடிட்’ வசதி கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஒரு பதிவைப் பதிந்த பின் அதில் பிழை திருத்தும் (எடிட்) வசதி இருக்கிறது. இதன் மூலம், பதிவில் சில மாற்றங்களை செய்துகொள்ளலாம். எடுத்துக்காட்டாக, பதியப்படும் வாக்கியத்தில் பிழைகள் ஏதேனும் நிகழ்ந்தால் அதை பதிவிட்ட பிறகும் திருத்திக் கொள்ளலாம். இது பதிவர்களுக்கு மிகத் தேவையான வசதியாக இருந்தாலும் இதுவரை ட்விட்டரில் இந்த வசதி இல்லை.
ட்விட்டர் நிறுவனம் உண்மையிலேயே அந்த வசதியை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் விரைவில் இந்த வசதி ‘புளூ டிக்’ பயனர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. தற்போது, எடிட் சேவையை கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் உள்ள அதிகார்பூர்வ பயனார்களுக்கு வழங்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம். விரைவில் அமெரிக்காவிற்கும் இச்சேவை வழங்கப்படவுள்ளது!
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆசியாவில் முதன்முறையாக தன்பாலின திருமணத்திற்கு நேபாளம் சட்ட அனுமதி!
வெள்ளி 1, டிசம்பர் 2023 11:20:56 AM (IST)

காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியா தீவிரம் காட்ட வேண்டும் : ஜஸ்டின் ட்ரூடோ
வியாழன் 30, நவம்பர் 2023 5:10:21 PM (IST)

ஊழல் வழக்கிலிருந்து நவாஸ் ஷெரீஃப் விடுவிப்பு: இஸ்லாபாத் உயா்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 30, நவம்பர் 2023 10:52:08 AM (IST)

தற்காலிக போர் நிறுத்தம்: 30 பாலஸ்தீனக் கைதிகளை விடுவித்தது இஸ்ரேல்!
புதன் 29, நவம்பர் 2023 5:18:37 PM (IST)

நியூசிலாந்து பொருளாதாராத்தை மேம்படுத்த முன்னுரிமை :புதிய பிரதமர் லக்சன் உறுதி!
செவ்வாய் 28, நவம்பர் 2023 11:31:44 AM (IST)

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்த நீட்டிப்பு: அமெரிக்க அதிபர் வரவேற்பு
செவ்வாய் 28, நவம்பர் 2023 10:17:45 AM (IST)
