» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியர்கள் உள்பட 23பேருடன் சென்ற இங்கிலாந்து கப்பலை ஈரான் சிறை பிடித்ததால் பதற்றம்

சனி 20, ஜூலை 2019 12:55:26 PM (IST)



இந்தியர்கள் உள்பட 23 ஊழியர்களுடன் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.

அணு ஆயுத பரவல் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. அதை தொடர்ந்து ஈரானுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கும் பொருளாதார தடை விதிக்கப்படும் என அச்சுறுத்தியுள்ளது. இந்நிலையில் சிரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற ஈரான் கப்பலை கிப்ரால்டார் என்ற இடத்தில் இங்கிலாந்து கடற்படை பறிமுதல் செய்தது. சிரியாவுக்கு கச்சா எண்ணெய் கடத்தி சென்றதாக குற்றம் சாட்டியது. 

இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான் பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறை பிடிக்க போவதாக எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்நிலையில் நேற்று பாரசீக வளைகுடாவில் ஹோர்முஷ் ஜலசந்தி பகுதியில் சென்று கொண்டிருந்த இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை சிறை பிடித்தது. ஈரான் கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்ததாகவும், ஈரான் புரட்சிகர படையினரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தவறான வழியில் சென்றதால் சிறை பிடித்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. ஆனால் இதை இங்கிலாந்தின் எண்ணெய் கப்பல் நிர்வாகம் மறுத்துள்ளது. சர்வதேச சட்ட திட்டங்களுக்குட்பட்டு பயணம் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது. 

ஸ்டெனா இம்பீரியோ எனப்படும் இங்கிலாந்து எண்ணெய் கப்பல் சவுதிஅரேபியா துறைமுகத்துக்கு சென்று கொண்டிருந்த போது சிறை பிடிக்கப்பட்டது.  அதில் 23 ஊழியர்கள் இருந்தனர். அவர்கள் இந்தியா, ரஷியா, வாத்வியா, மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்தவர்கள்.கப்பல் சிறை பிடிக்கப்பட்ட போது நடந்த தாக்குதலில் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரசீக வளைகுடாவில் ஹோர்முஷ் ஜலசந்தியில் ஈரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியது. அதனால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.இந்த நிலையில் இங்கு இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்டம் தொடர்ந்து நீடிக்கிறது.


மக்கள் கருத்து

இவன்Jul 20, 2019 - 01:18:54 PM | Posted IP 173.2*****

ஈரான் ஒரு முட்டாள் நாடு ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Anbu Communications




Black Forest Cakes




Thoothukudi Business Directory