» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய தடை: அமெரிக்க பிரதிநிதி சபையில் தீர்மானம்

வெள்ளி 19, ஜூலை 2019 12:50:26 PM (IST)

சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கும் 3 தீர்மானங்கள் அமெரிக்க பிரதிநிதி சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டன.

இந்த ஆண்டு துவக்கத்தில் அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் அவசரநிலை பிரகடனம் செய்திருந்த போது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஜோர்டானுக்கு 800 கோடி மதிப்பிற்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய போவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த ஆயுதங்களால் போரால் சீர்குலைந்துள்ள ஏமன் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் நிலைமை மேலும் மோசமாகும் என எதிர்க்கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலை வழக்கில் சவுதி அரேபியா பட்டத்து இளவரசருக்கு தொடர்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அந்நாட்டுக்கு ஆயுத விற்பனை செய்ய முடிவெடுத்த அதிபர் டிரம்பை எதிர்க்கட்சியினர் கடுமையாக சாடினர். எதிர்ப்புகளை கண்டு கொள்ளாத அதிபர் டிரம்ப் தன் முடிவை தொடர்ந்து செயல்படுத்த துவங்கினார். சவுதி அரேபியாவுக்கு ஆயுதம் விற்பனை செய்வதற்கான தீர்மானத்திற்கு செனட் சபை ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் எதிர்க்கட்சியினரான ஜனநாயக கட்சி எம்.பிக்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதிநிதிகள் சபையில் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கும் 3 தீர்மானங்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன.

ஆனால் இந்த தீர்மானங்களை அதிபர் டிரம்ப் தன் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்ய முடியும். அவ்வாறு செய்யாமல் இருக்க சபையின் மூன்றில் 2 பங்கு உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். ஆனால் அதற்கு தேவையான வாக்கு எண்ணிக்கைகள் 3 தீர்மானங்களுக்கும் நேற்று கிடைக்கவில்லை.எனவே ஆயுத விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானம் வெள்ளை மாளிகைக்கு அதிபர் கையெழுத்திற்காக அனுப்பப்படும் போது அதிபர் டிரம்ப் தன் வீட்டோ அதிகாரம் மூலம் ஆயுத விற்பனையை தடை செய்யும் தீர்மானங்களை ரத்து செய்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Nalam PasumaiyagamBlack Forest CakesThoothukudi Business Directory