» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரபேல் விமானம் இன்னும் 2 மாதங்களில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்: பிரான்ஸ் தூதர் தகவல்

சனி 6, ஜூலை 2019 12:19:33 PM (IST)

இந்தியா கொள்முதல் செய்யும் 36 போர் விமானங்களில், முதல் போர்விமானம் இன்னும் 2 மாதங்களில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என பிரான்ஸ் தூதர் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படைக்கு ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டுடன் மத்திய பா.ஜனதா கூட்டணி அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வரும் வேளையில் முதல் ரபேல் விமானம் வரும் செப்டம்பர் மாதம் இந்தியா வந்து விடும் என தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கான பிரான்ஸ் தலைமை தூதர் அலெக்சாண்ட்ரி சீக்லர் ம.பி.யின் போபாலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிரான்சிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்யும் 36 போர் விமானங்களில், முதல் போர் விமானம் இன்னும் 2 மாதத்தில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் செப்டம்பர் மாதம் ஒப்படைக்கப்படும். மற்ற போர் விமானங்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes



Nalam Pasumaiyagam

CSC Computer Education




Thoothukudi Business Directory