» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ராக்கெட்டில் திடீர் கோளாறால் அவசர அவசரமாக தரை இறங்கியது: 2 வீரர்கள் உயிர் தப்பினர்
வெள்ளி 12, அக்டோபர் 2018 11:35:54 AM (IST)

சோயுஸ் ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறால் அவசர அவசரமாக தரை இறங்கியது. இதனால் 2 வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் ஒன்றை அமைத்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அந்த விண்வெளி நிலையத்துக்கு ரஷிய விண்வெளி வீரர் அலெக்சி ஓவ்சினின் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக் ஆகிய இருவரும் புறப்பட ஏற்பாடு ஆகி இருந்தது. அவர்கள் இருவரும் கஜகஸ்தான் நாட்டின் பைகானூர் காஸ்மோடிராமில் இருந்து சோயுஸ் ராக்கெட் மூலம் நேற்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.40 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார்கள்.
ஆனால் அந்த ராக்கெட் புறப்பட்டு விண்ணில் பாய்ந்த சிறிது நேரத்தில் சற்றும் எதிர்பாராத வகையில், அதன் பூஸ்டரில் கோளாறு ஏற்பட்டது.அதைத் தொடர்ந்து அந்த ராக்கெட் அவசரமாக கஜகஸ்தானில் திரும்பி வந்து தரை இறங்கியது.அதில் பயணம் செய்த வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்கள் ‘பேலிஸ்டிக்’ இறங்கு வாகனம் மூலம் பாதுகாப்பாக தரை இறங்கியதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘நாசா’ தெரிவித்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புல்வாமா பயங்கரவாத தாக்குதலால் எங்களுக்கு என்ன பயன்? பாக். பிரதமர் இம்ரான்கான் கேள்வி
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 4:26:49 PM (IST)

அவசர நிலை பிரகடனம்: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 11:18:42 AM (IST)

இங்கிலாந்து அரச குடும்பத்தில் பிரிவு: இளவரசர்கள் மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 10:37:44 AM (IST)

புல்வாமா தாக்குதலுக்கு இந்திய உளவுத்துறையின் தோல்வியே காரணம் : பாகிஸ்தான் கருத்து!
திங்கள் 18, பிப்ரவரி 2019 12:34:22 PM (IST)

இந்திய தேசியக் கொடியுடன் மாணவர்கள் நடனம்; பாகிஸ்தானில் பள்ளியின் அங்கீகாரம் ரத்து!
திங்கள் 18, பிப்ரவரி 2019 10:27:05 AM (IST)

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு: ஜப்பான் பரிந்துரை
திங்கள் 18, பிப்ரவரி 2019 10:22:19 AM (IST)
