» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தென் கொரிய முன்னாள் பெண் அதிபருக்கு மேலும் 8 ஆண்டு சிறை : ஊழல் வழக்கில் தீர்ப்பு

சனி 21, ஜூலை 2018 11:34:53 AM (IST)



ஊழல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வரும் தென்கொரியாவின் முதல் பெண் அதிபர் பார்க் கியுன் ஹை, மற்றொரு வழக்கில் மேலும் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.

தென்கொரியாவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையைப் பெற்று இருந்தவர் பார்க் கியுன் ஹை. அவர் தனது தோழியுடன் சேர்ந்து ஊழல்கள் பல புரிந்து, பதவியை இழந்தார். இதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ம் தேதி, 24 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த நாட்டின் உளவு அமைப்பான தேசிய உளவு அமைப்பிடம் சட்ட விரோதமாக 2.9 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.19 கோடியே 72 லட்சம்) நிதி பெற்று, நாட்டின் கஜானாவுக்கு இழப்பு ஏற்படுத்தினார்; 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆளும் கட்சியின் வேட்பாளர் தேர்வில் முறையற்ற விதத்தில் தலையிட்டார் என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு அவர் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என மறுத்து விட்டார்.

இந்நிலையில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 8 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அவருக்கு விதிக்கப்பட்ட 24 ஆண்டு சிறைத்தண்டனையின் தொடர்ச்சியாக அவர் மேலும் 8 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் தேசிய உளவு அமைப்பின் தலைவராக இருந்த 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகி பார்க் கியுன் ஹையுக்கு எதிராக சாட்சியம் அளித்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals

New Shape Tailors


Joseph Marketing





Thoothukudi Business Directory