» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:44:13 PM (IST)

தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலை அவமதிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக்கும் தேசியக் கௌரவம் மீதான அவமதிப்புகள் தடுப்புச் சட்டத்திருத்த மசோதா 2026-க்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இம்மாசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து, தேசிய கீதமான 'ஜன கண மன' பாடலுக்கு இணையான சட்டபூர்வப் பாதுகாப்பு தேசியப் பாடலான வந்தே மாதரத்திற்கும் கிடைத்துள்ளது.
தேசியக் கொடி, அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தேசிய கீதம் போன்ற தேசியச் சின்னங்களுடன் 'வந்தே மாதரம்' பாடலும் சேர்க்கப்பட்டுள்ளது. இப்பாடலை பாடுவதைத் தடுப்பது, இடையூறு விளைவிப்பது அல்லது அவமதிப்பது 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படக்கூடிய குற்றமாகும்.
இனி அரசு மற்றும் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் 'ஜன கண மன' பாடப்படுவதற்கு முன்பாக 'வந்தே மாதரம்' பாடல் கட்டாயமாகப் பாடப்படும். வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அரசு நிகழ்ச்சிகளில் இப்பாடலின் 6 சரணங்களும் முழுமையாகப் பாடப்படும்.
வரும் ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில், முதன்முறையாக 'வந்தே மாதரம்' முழுமையாகப் பாடப்பட்ட பின்னரே தேசிய கீதம் பாடப்படவுள்ளது குறிப்பிடத் தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாழும் கலை அமைப்புக்கு விதித்த ரூ. 5 கோடி அபராதம் ரத்து: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 22, ஆகஸ்ட் 2026 5:43:01 PM (IST)

ஏடிஎம்களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூல்? - எஸ்பிஐ நிர்வாகம் விளக்கம்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:00:19 PM (IST)

காவல் நிலையத்தில் ராகுல், பிரியங்கா தர்ணா: டெல்லியில் பெரும் பரபரப்பு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 4:36:39 PM (IST)

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட தமிழக அரசே இடத்தை தீர்மானிக்கட்டும்! - கேரள முதல்வர்
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 5:56:07 PM (IST)

கிணற்றில் கார் பாய்ந்து தம்பதி, 2 குழந்தைகள் உயிரிழப்பு: தெலுங்கானாவில் சோகம்!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:22:33 PM (IST)

கேஒய்சி புதுப்பித்தல் பெயரில் அதிகரிக்கும் சைபர் மோசடி: வாடிக்கையாளர்களுக்கு ஆர்பிஐ எச்சரிக்கை!
புதன் 19, ஆகஸ்ட் 2026 3:58:31 PM (IST)








