» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம்: திமுக புறக்கணிப்பு!
புதன் 22, ஜூலை 2026 12:16:45 PM (IST)

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு உடை அணிந்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திய நிலையில், அப் போராட்டத்தை திமுக புறக்கணித்துள்ளது.
தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் மருத்துவ நுழைவுத் தேர்வான 'நீட்' உட்படப் பல்வேறு தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி டெல்லியில் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்த முயன்ற போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தித் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது :
மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய கல்வி அமைச்சரைப் பதவி விலக வலியுறுத்தியும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரால் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
கருப்பு உடையில் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்:
இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து வருகை தந்தனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களும், கூட்டணிக் கட்சி எம்பிக்களும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
திமுக புறக்கணிப்பு:
அதேவேளையில், 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் இப் போராட்டத்தில் திமுக எம்பிக்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. அவர்கள் கருப்பு உடை அணியாமல் வழக்கமான உடையில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா!
சனி 25, ஜூலை 2026 3:44:23 PM (IST)

இந்தியா - இஸ்ரேல் இடையே தடையற்ற வர்த்தகம் : 2-ஆம் கட்டப் பேச்சுவார்த்தை வெற்றி!
சனி 25, ஜூலை 2026 12:00:05 PM (IST)

நீட் விவகாரம்: மத்திய உயர்கல்வித் துறைச் செயலாளர் அதிரடி மாற்றம் – சிறப்பு நீதிபதி நியமனம்!
வெள்ளி 24, ஜூலை 2026 12:53:51 PM (IST)

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: தண்டனை நிறுத்தி வைக்க கேரளா உயர் நீதிமன்றம் மறுப்பு!
வெள்ளி 24, ஜூலை 2026 11:52:19 AM (IST)

மத்திய அரசின் உறுதிமொழியை ஏற்று சோனம் வாங்சுக் 26 நாட்கள் உண்ணாவிரதம் வாபஸ்!
வெள்ளி 24, ஜூலை 2026 11:12:52 AM (IST)

ஒட்டிப் பிறந்த சகோதரிகளுக்குத் தனித்தனி தேர்வறை: எஸ்பிஐ தேர்வில் எழுந்த வினோதச் சிக்கல்!
வெள்ளி 24, ஜூலை 2026 10:15:50 AM (IST)








