» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு: ஆர்பிஐ முதல்கட்டச் சோதனை முயற்சி!
செவ்வாய் 21, ஜூலை 2026 11:36:15 AM (IST)

இந்தியாவில் தற்போது புழக்கத்திலுள்ள காகித நோட்டுகளுக்குப் பதிலாக, நீண்ட காலம் உழைக்கக்கூடிய பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திட்டமிட்டுள்ளது. இதற்கான முதல்கட்டச் சோதனை முயற்சியை ரிசர்வ் வங்கி விரைவில் தொடங்கவுள்ளது.
இச் சோதனை முயற்சி வெற்றிபெறும் பட்சத்தில், 2027-ஆம் ஆண்டில் முழுவீச்சில் பிளாஸ்டிக் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் எனத் தெரிகிறது. மக்களிடையே அதிக அளவில் கைமாறி எளிதில் அழுக்காகும் ரூ.10, ரூ.20 ஆகிய குறைந்த மதிப்புள்ள நோட்டுகளில் இச் சோதனை முதற்கட்டமாகத் தொடங்கப்பட வாய்ப்புள்ளது.
புதிய பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படுவதால் தற்போது புழக்கத்திலுள்ள காகித ரூபாய் நோட்டுகள் செல்லாததாகி விடாது. காகித நோட்டுகளும் புதிய பிளாஸ்டிக் நோட்டுகளும் தங்குதடையின்றி இணையாகவே புழக்கத்தில் இருக்கும் என்றும், காகித நோட்டுகள் படிப்படியாகவே மாற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
உலகளாவிய நிறுவனங்களுக்கு அழைப்பு:
பிளாஸ்டிக் நோட்டுகளைத் தயாரிக்கத் தேவையான பிரத்யேகத் தாள்களை வழங்க உலகளாவிய நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கியின் நோட்டு அச்சிடும் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட இத் தாள்களை வழங்க விண்ணப்பிக்க ஆகஸ்ட் 18 கடைசி நாளாகும்.
பிளாஸ்டிக் நோட்டுகளின் சிறப்பம்சங்கள்:
சாதாரண காகித நோட்டுகளை விட பிளாஸ்டிக் நோட்டுகள் நீண்ட காலம் உழைக்கும். இவை தண்ணீர், அழுக்கு, எண்ணெயால் எளிதில் பாழாகாது. இவற்றை நகல் எடுப்பது மிகக் கடினம் என்பதால் கள்ள நோட்டுப் புழக்கத்தை முற்றிலுமாகத் தடுக்க முடியும்.
ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்கனவே இப் பாலிமர் நோட்டு முறையைப் பயன்படுத்தி வருகின்றன. இருப்பினும் இப் புதிய சோதனை முயற்சி குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா!
சனி 25, ஜூலை 2026 3:44:23 PM (IST)

இந்தியா - இஸ்ரேல் இடையே தடையற்ற வர்த்தகம் : 2-ஆம் கட்டப் பேச்சுவார்த்தை வெற்றி!
சனி 25, ஜூலை 2026 12:00:05 PM (IST)

நீட் விவகாரம்: மத்திய உயர்கல்வித் துறைச் செயலாளர் அதிரடி மாற்றம் – சிறப்பு நீதிபதி நியமனம்!
வெள்ளி 24, ஜூலை 2026 12:53:51 PM (IST)

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: தண்டனை நிறுத்தி வைக்க கேரளா உயர் நீதிமன்றம் மறுப்பு!
வெள்ளி 24, ஜூலை 2026 11:52:19 AM (IST)

மத்திய அரசின் உறுதிமொழியை ஏற்று சோனம் வாங்சுக் 26 நாட்கள் உண்ணாவிரதம் வாபஸ்!
வெள்ளி 24, ஜூலை 2026 11:12:52 AM (IST)

ஒட்டிப் பிறந்த சகோதரிகளுக்குத் தனித்தனி தேர்வறை: எஸ்பிஐ தேர்வில் எழுந்த வினோதச் சிக்கல்!
வெள்ளி 24, ஜூலை 2026 10:15:50 AM (IST)








