» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி ரயில் பாதை பணிகள் விரைவில் தொடங்கும்: மத்திய அமைச்சர் உறுதி!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 4:52:58 PM (IST)
மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி ரயில் பாதை பணிகள் விரைவில் தொடங்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மேலவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, தமிழகத்தின் முக்கிய ரயில்வே திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ராஜாதி சல்மா, மதுரை - தூத்துக்குடி இடையிலான அருப்புக்கோட்டை வழி ரயில் பாதை திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து கேள்வி எழுப்பினார். தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து வசதியைக் கருத்தில் கொண்டு, நிலுவையில் உள்ள இந்தப் புதிய ரயில் பாதை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.உறுப்பினரின் கோரிக்கைக்குப் பதிலளித்துப் பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி இடையிலான புதிய ரயில் பாதை திட்டத்திற்கான பணிகள் உரிய முன்னுரிமையுடன் மேற்கொள்ளப்படும்," எனத் தெரிவித்தார்.
இந்த புதிய ரயில் பாதை அமைக்கப்படுவதன் மூலம் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்குக் குறைவான நேரத்தில் பயணிக்க முடியும். மேலும், அருப்புக்கோட்டை உள்ளிட்ட இடைப்பட்ட நகரங்கள் ரயில்வே வரைபடத்தில் இணைக்கப்பட்டு, அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பால் தென் தமிழக மக்கள் மற்றும் தொழில் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மக்கள் கருத்து
தூத்துக்குடிக்காரன்Apr 9, 2026 - 12:08:09 PM | Posted IP 162.1*****
மிக்க நன்றி. அதே சமயம் தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூருக்கு புதிய ரயில் பாதை அமைக்க வழிவகை செய்தால் அந்த பிராந்தியம் ரயில் போக்குவரத்தில் முழுமைபெறும். மேலும் தற்போது தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு காலை நேரத்தில் நேரடி ரயில்கள் தேவை. வாஞ்சி மணியாச்சி சந்திப்பு ரயில்நிலையத்தை நம்பியே தூத்துக்குடி மக்கள் பிரயாணம் செய்யவேண்டிய நிலைதான் உள்ளது. இதனால் தூத்துக்குடியிலிருந்து மதுரை செல்ல கால விரயமும் ஏற்படுகிறது. மதுரைக்கு காலை நேரத்தில் நாகர்கோவில்/திருநெல்வேலி, செங்கோட்டை/தென்காசி மற்றும் ராமேஸ்வரத்தில் இருந்து ரயில்கள் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் தென் தமிழகத்தின் முக்கிய தொழில்நகரமான தூத்துக்குடியிலிருந்து காலை நேரத்தில் மதுரைக்கு நேரடி ரயில் இல்லாதது வேதனைக்குரிய விஷயம்.
மேலும் தொடரும் செய்திகள்

வளர்ந்த இந்தியா இலக்கை நோக்கித் தொடர்ந்து முன்னேறுவோம் – பிரதமர் மோடி உறுதி!
புதன் 10, ஜூன் 2026 12:23:27 PM (IST)

அரசுப் பள்ளிகளில் மட்டுமே பிள்ளைகளை சேர்ப்போம் : தெலங்கானா கிராம மக்கள் அதிரடித் தீர்மானம்!
புதன் 10, ஜூன் 2026 12:13:28 PM (IST)

அதிமுகவிலிருந்து விலகிய 4 எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:15:29 PM (IST)

உஜ்வாலா மானிய கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை 4 ஆகக் குறைப்பு: பயனாளிகளுக்கு அதிர்ச்சி!
செவ்வாய் 9, ஜூன் 2026 10:40:06 AM (IST)

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்: இண்டியா கூட்டணி வலியுறுத்தல்
செவ்வாய் 9, ஜூன் 2026 10:18:50 AM (IST)

செய்தித்தாள்களில் உணவுகளை மடித்து வழங்கினால் அதிரடி நடவடிக்கை! – FSSAI எச்சரிக்கை!
திங்கள் 8, ஜூன் 2026 5:11:07 PM (IST)










IndianApr 10, 2026 - 10:41:21 AM | Posted IP 162.1*****