» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
எரிபொருள் தட்டுப்பாடு என வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை : மத்திய அரசு எச்சரிக்கை!
வெள்ளி 27, மார்ச் 2026 8:32:34 AM (IST)
மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தைப் பொதுமக்கள் கொள்ளத் தேவையில்லை என்றும், வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது: சுமார் 74 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் சுமார் 60 நாட்களுக்குத் தடையின்றி வழங்கப் போதிய இருப்பு உள்ளது.
எல்.பி.ஜி: உள்நாட்டுச் சுத்திகரிப்பு நிலையங்களின் உற்பத்தி 40% அதிகரித்துள்ளது. தினசரித் தேவையான 80 ஆயிரம் டன்களில், 50 ஆயிரம் டன் உள்நாட்டிலேயே உற்பத்தியாகிறது. இதுதவிர, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிலிருந்து 8 லட்சம் டன் எல்.பி.ஜி. ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டு 22 முனையங்கள் வழியாக வந்துகொண்டிருக்கிறது.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி:
"இந்தியாவில் 6 நாட்களுக்கு மட்டுமே எரிபொருள் கையிருப்பு உள்ளது" என்பது போன்ற தகவல்கள் முற்றிலும் தவறானவை என அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் தினசரி 50 லட்சத்திற்கும் அதிகமான சிலிண்டர்களை வெற்றிகரமாக விநியோகித்து வருகின்றன.
வணிக ரீதியிலான சிலிண்டர் ஒதுக்கீடு 50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பதுக்கல் அல்லது கள்ளச்சந்தையைத் தவிர்க்க மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல் நிலையங்களுக்கான கடன் காலம் (Credit period) 3 நாட்களுக்கு மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, உடனடியாகப் பணம் செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் உரிமையாளர்களுக்கு இல்லை.
உலக அளவில் எரிசக்தி நெருக்கடி நிலவினாலும், இந்தியா 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு எரிபொருளை ஏற்றுமதி செய்யும் வலிமை கொண்ட நாடாகத் திகழ்கிறது. "தேசிய எரிசக்தி அவசர நிலை" அறிவிக்க வேண்டிய சூழல் இந்தியாவுக்கு இல்லை. எனவே, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வளர்ந்த இந்தியா இலக்கை நோக்கித் தொடர்ந்து முன்னேறுவோம் – பிரதமர் மோடி உறுதி!
புதன் 10, ஜூன் 2026 12:23:27 PM (IST)

அரசுப் பள்ளிகளில் மட்டுமே பிள்ளைகளை சேர்ப்போம் : தெலங்கானா கிராம மக்கள் அதிரடித் தீர்மானம்!
புதன் 10, ஜூன் 2026 12:13:28 PM (IST)

அதிமுகவிலிருந்து விலகிய 4 எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:15:29 PM (IST)

உஜ்வாலா மானிய கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை 4 ஆகக் குறைப்பு: பயனாளிகளுக்கு அதிர்ச்சி!
செவ்வாய் 9, ஜூன் 2026 10:40:06 AM (IST)

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்: இண்டியா கூட்டணி வலியுறுத்தல்
செவ்வாய் 9, ஜூன் 2026 10:18:50 AM (IST)

செய்தித்தாள்களில் உணவுகளை மடித்து வழங்கினால் அதிரடி நடவடிக்கை! – FSSAI எச்சரிக்கை!
திங்கள் 8, ஜூன் 2026 5:11:07 PM (IST)









