» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு!!

புதன் 3, டிசம்பர் 2025 3:22:30 PM (IST)

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவைச் சந்தித்துள்ளது. சந்தை மதிப்பின்படி, ஒரு டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு 90.11 ஆக உள்ளது.

இன்று காலை 10 மணி அளவில், ஒரு அமெரிக்க டாலர் ரூ. 90.11 ஆக இருந்தது. இந்த சரிவு முன் எப்போதும் இல்லாததது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வர்த்தகர்கள், "இந்த வீழ்ச்சி ஆச்சரியமல்ல. ஆனால், சரிவின் வேகம் ஏமாற்றமளித்துள்ளது. ரூபாய் சரிவுக்கு பல காரணிகள் உள்ளன.

அமெரிக்க - இந்திய வர்த்தக விவாதங்களில் நிலவும் சுணக்கம், சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்றத் தன்மை ஆகியவை காரணமாக, உலக முதலீட்டாளர்கள் இந்திய சந்தைகளில் இருந்து தங்கள் பணத்தை எடுத்ததே இதற்குக் காரணம். பெரும்பாலான முக்கிய நாணயங்களுக்கு எதிராக டாலர் தொடர்ந்து வலுபெற்றதால், முதலீட்டாளர்கள் டாலரை நோக்கித் திரும்பினர்.” என தெரிவித்துள்ளனர்.

ரூபாய் சரிவு காரணமாக இறக்குமதி செலவுகள் அதிகரிக்கின்றன. குறிப்பாக, கச்சா எண்ணெய், மின்னணு மற்றும் தொழில்துறை பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் உயர்கின்றன. வெளிநாட்டுக் கடன்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு கடன் சுமை மேலும் கூடுகிறது. இதனால், சாமானிய மக்கள் மற்றும் வணிகர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அதேநேரத்தில், இந்த சரிவால் ஏற்றுமதியாளர்கள் லாபம் அடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory