» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தொழிலதிபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று மகன் தற்கொலை: குடிபோதையில் வெறிச்செயல்!
புதன் 5, நவம்பர் 2025 12:15:26 PM (IST)
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் சந்த் அகர்வாலை அவரது மகன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்டார்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ் சந்த் அகர்வால், கடந்த 1977-ம் ஆண்டு தினேஷ் 555 பீடி பிராண்டை நிறுவினார். இந்த பிராண்டை பிஹார், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தினார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட சுரேஷ் சந்த் அகர்வால், உத்தர பிரதேசத்தின் விரிந்தாவன் நகரில் வசித்து வந்தார்.இந்நிலையில், சுரேஷ் சந்த் அகர்வாலை அவரது மகன் இரு தினங்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பின்னர் அதே துப்பாக்கியால் தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "சுரேஷ் சந்த் மகன் நரேஷ் அகர்வால் மது பழக்கத்துக்கு அடிமையாக இருந்துள்ளார். இதைக் கண்டித்ததால் தந்தை மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் ஆத்திரமடைந்த நரேஷ் துப்பாக்கியால் தந்தையை சுட்டுள்ளார். பின்னர் அவர், அதே துப்பாக்கியால் தன்னை சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்’’ என்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுக பொதுச்செயலாளர் பதவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
திங்கள் 8, டிசம்பர் 2025 3:46:50 PM (IST)

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் விடுதலை!!!
திங்கள் 8, டிசம்பர் 2025 11:58:37 AM (IST)

சின்னச்சாமி மைதானத்தில் வழக்கம்போல் ஐபிஎல் கிரிக்கெட் நடைபெறும்: டி.கே.சிவகுமாா்
திங்கள் 8, டிசம்பர் 2025 11:37:23 AM (IST)

எஸ்ஐஆர் படிவத்தில் தவறான தகவல் அளித்த குடும்பத்தினர் மீது வழக்கு: நாட்டிலேயே முதல்முறை!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:34:56 AM (IST)

கோவா இரவு விடுதியில் தீ விபத்து: சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் பலி ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
திங்கள் 8, டிசம்பர் 2025 8:44:00 AM (IST)

10 முறை முதல்-அமைச்சர் : உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நிதிஷ்குமார்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:55:32 PM (IST)










