» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தில் 3 சகோதரிகள் உயிரிழப்பு
செவ்வாய் 4, நவம்பர் 2025 11:26:18 AM (IST)

ஐதராபாத் அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தில் 3 சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம், தாண்டூரு நகர்ப்புறத்தில் உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் எல்லைய்யா. இவருக்கு 4 மகள்கள். மூத்த மகளுக்கு திருமணம் செய்துள்ளார். எஞ்சியுள்ள தனுஷா, சாய்பிரியா, நந்தினி ஆகிய மூவரும் ஹைதராபாத்தில் படித்து வந்தனர். இந்நிலையில், இவர்களின் உறவினர்களின் திருமணம் கடந்த மாதம் 15-ம் தேதி தாண்டூரில் நடந்தது.
இதற்காக 3 மகள்களும் ஹைதராபாத்தில் இருந்து வந்திருந்தனர். திருமண நிகழ்ச்சியில் மிகவும் மகிழ்ச்சியோடு கலந்து கொண்ட இவர்கள், நேற்று திங்கட்கிழமை மீண்டும் கல்லூரிகளுக்கு செல்ல தாண்டூர் ரயில் நிலையத்துக்கு சென்றுள்ளனர். அங்கு ரயில் சென்றுவிடவே, இவர்களின் தந்தை எல்லைய்யா மூன்று மகள்களையும் அந்த வழியாக வந்த அரசு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தார்.
அந்த பேருந்து மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், சகோதரிகள் மூவரும் ஒரே இருக்கையில், ஜல்லி கற்களில் சிக்கிக் கொண்டு பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து போலீசார் உடல்களை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த 3 மகள்களின் சடலங்களைப் பார்த்து பெற்றோர், உற்றார், உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுக பொதுச்செயலாளர் பதவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
திங்கள் 8, டிசம்பர் 2025 3:46:50 PM (IST)

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் விடுதலை!!!
திங்கள் 8, டிசம்பர் 2025 11:58:37 AM (IST)

சின்னச்சாமி மைதானத்தில் வழக்கம்போல் ஐபிஎல் கிரிக்கெட் நடைபெறும்: டி.கே.சிவகுமாா்
திங்கள் 8, டிசம்பர் 2025 11:37:23 AM (IST)

எஸ்ஐஆர் படிவத்தில் தவறான தகவல் அளித்த குடும்பத்தினர் மீது வழக்கு: நாட்டிலேயே முதல்முறை!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:34:56 AM (IST)

கோவா இரவு விடுதியில் தீ விபத்து: சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் பலி ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
திங்கள் 8, டிசம்பர் 2025 8:44:00 AM (IST)

10 முறை முதல்-அமைச்சர் : உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நிதிஷ்குமார்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:55:32 PM (IST)










