» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தெருநாய்கள் விவகாரத்தில் மனிதாபிமான வழி தேவை: பிரியங்கா காந்தி வலியுறுத்தல்!
செவ்வாய் 12, ஆகஸ்ட் 2025 5:09:40 PM (IST)
தெருநாய்களை அகற்றும் விவகாரத்தில் மனிதாபிமான வழியைக் கண்டறிய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் சுற்றித் திரியும் அனைத்து தெருநாய்களையும் பிடித்து 8 வாரங்களுக்குள் காப்பகங்களில் அடைத்து பராமரிக்க உச்சநீதிமன்றம் நேற்று(திங்கள்கிழமை) உத்தரவிட்டது. இந்த நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் விதத்தில் நடந்துகொள்ளும் மக்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் அல்லது அமைப்புகளின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைத் தொடர்ந்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "டெல்லி நகரத்தின் அனைத்து தெருநாய்களையும் ஒரு சில வாரங்களுக்குள் காப்பகங்களுக்கு மாற்றுவது அவற்றை கொடூரமாக மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதற்கு வழிவகுக்கும். அவற்றை வைத்திருக்க போதுமான காப்பகங்கள்கூட இங்கு இல்லை.
நகர்ப்புறச் சூழலில் உள்ள விலங்குகள் மோசமான சிகிச்சை மற்றும் மிருகத்தனத்திற்கு ஆளாகின்றன. நிச்சயமாக இந்த சூழ்நிலையை நிர்வகிக்க ஒரு சிறந்த வழி இருக்கலாம்.இந்த அப்பாவி விலங்குகளைப் பாதுகாப்பாக கவனிக்க ஒரு சிறந்த மனிதாபிமான வழியைக் கண்டறிய வேண்டும். நாய்கள் மிகவும் அழகான, மென்மையான உயிரினங்கள். அவைகள் இப்படியான கொடுமைக்கு ஆளாகக்கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மெஸ்ஸிக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரம் பரிசளித்த ஆனந்த் அம்பானி!
புதன் 17, டிசம்பர் 2025 4:39:23 PM (IST)

மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் குளறுபடி: மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜினாமா
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:28:50 PM (IST)

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 3:46:07 PM (IST)

தமிழக தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம்: 3 மத்திய அமைச்சர்களை களமிறக்கிய பாஜக!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:51:50 AM (IST)

கடும் பனி மூட்டத்தால் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து : 4 பேர் பலி
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:14:45 AM (IST)

நூறுநாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு: மக்களவையில் திமுக நோட்டீஸ்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:11:15 AM (IST)











ஆனந்த்Aug 13, 2025 - 08:54:55 AM | Posted IP 172.7*****