» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நாம் அதிக சமத்துவத்தை நோக்கி முன்னேறி வருகிறோம்: பிரதமர் மோடி பெருமிதம்
ஞாயிறு 13, ஜூலை 2025 6:47:17 PM (IST)
நம் நாட்டில் சமத்துவமின்மை வேகமாகக் குறைந்து வருகிறது. நாம் அதிக சமத்துவத்தை நோக்கி முன்னேறி வருகிறோம் என்றுபிரதமர் மோடி தெரிவித்தார்.
நாடு முழுவதும் மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு தேர்வான 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி 47 இடங்களில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: ஜனநாயகம் மற்றும் மக்கள் தொகை ஆகிய இந்தியாவின் இரண்டு வரம்பற்ற பலத்தை உலகம் ஒப்புக் கொள்கிறது.
சமீபத்தில் நான் 5 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். ஒவ்வொரு நாட்டிலும் நம் இளைஞர் சக்தியை புகழ்ந்து பேசுவதை நான் உணர்ந்தேன். இந்த ஆற்றலை பயன்படுத்தியதற்குக் காரணம் மத்திய அரசின் கொள்கை சீர்திருத்தங்கள்தான். நம் நாட்டில் சமத்துவமின்மை வேகமாகக் குறைந்து வருகிறது. நாம் அதிக சமத்துவத்தை நோக்கி முன்னேறி வருகிறோம்.
கடந்த 10 ஆண்டுகளில் 90 கோடிக்கும் மேற்பட்டோர் மக்கள் நலத் திட்டங்களால் பயன் அடைந்து வருவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) சமீபத்தில் கூறியிருந்ததை நினைவுகூர்கிறேன். இந்த திட்டங்கள் மக்களுக்கு சமூக பாதுகாப்பை மட்டும் வழங்கவில்லை, வேலை வாய்ப்பையும் உருவாக்கி உள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது: 2,000+ விமானங்கள் இயக்கம்!
சனி 13, டிசம்பர் 2025 5:42:25 PM (IST)

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: விசாரணை நடத்த மம்தா உத்தரவு
சனி 13, டிசம்பர் 2025 4:35:33 PM (IST)

திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
சனி 13, டிசம்பர் 2025 4:19:29 PM (IST)

கேரளத்தில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 6பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!
சனி 13, டிசம்பர் 2025 11:17:40 AM (IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!
சனி 13, டிசம்பர் 2025 10:51:14 AM (IST)

காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு : மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
சனி 13, டிசம்பர் 2025 10:39:32 AM (IST)










