» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்​திரா காந்தி அமல்​படுத்திய அவசர நிலை ஒரு கருப்பு அத்தியாயம்: சசி தரூர் விமர்சனம்!!

வெள்ளி 11, ஜூலை 2025 10:58:09 AM (IST)

முன்​னாள் பிரதமர் இந்​திரா காந்தி ஆட்​சிக் காலத்​தில் அமல்​படுத்​தப்​பட்ட அவசர நிலை, ஒரு கருப்பு அத்​தியாயம் என்று காங்​கிரஸ் மூத்த தலை​வர் சசி தரூர் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக மலை​யாள நாளிதழில் அவர் எழு​தி​யுள்ள கட்​டுரை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி அப்​போதைய பிரதமர் இந்​திரா காந்தி நாட்​டில் அவசர நிலையை அமல் செய்​தார். கடந்த 1977-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி வரை 21 மாதங்​கள் அவசர நிலை அமலில் இருந்​தது.

இந்த அவசர நிலை காலத்​தில் நான் அமெரிக்​கா​வில் உயர் கல்வி பயின்று கொண்​டிருந்​தேன். அங்​கிருந்து இந்​தி​யா​வின் நிலையை மிக​வும் உன்​னிப்​பாகக் கண்​காணித்​தேன். அவசர நிலை​யின்​போது மக்​களின் அடிப்​படை உரிமை​கள் பறிக்கப்பட்டன. செய்​தி​யாளர்​கள், சமூக ஆர்​வலர்​கள், எதிர்க்​கட்சி தலை​வர்​கள் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். சிறை​களில் மனித உரிமை​கள் அப்​பட்​ட​மாக மீறப்​பட்​டன.

இந்​திரா காந்​தி​யின் மகன் சஞ்​சய் காந்​தி, கட்​டாய கருத்​தடை திட்​டத்தை அமல்​படுத்​தி​னார். இது அவசர நிலை​யின் அவலத்துக்குமிகச் சிறந்த உதா​ரணம் ஆகும். தலைநகர் டெல்லி உள்​ளிட்ட நகரங்​களில் குடிசை பகு​தி​கள் இடிக்​கப்​பட்​டன. ஆயிரக்​கணக்​கான ஏழைகள் வீடு, உடைமை​களை இழந்து பரித​வித்​தனர்.

இந்​திரா காந்​தி​யின் அவசர நிலை, நமக்கு பல்​வேறு பாடங்​களை கற்றுத் தந்​திருக்​கிறது. அப்​போது நாட்​டின் 4-வது தூணான பத் திரிகை துறை​யின் சுதந்​திரம் பறிக்​கப்​பட்​டது. நீதித்​துறை​யின் சுதந்​திரம் பாதிக்​கப்​பட்​டது. நாடாளு​மன்​றம் முடக்​கப்​பட்​டது. இது​போன்ற சூழல் இனிமேல் ஏற்​படக்​கூ​டாது என்ற படிப்​பினையை அவசர நிலை நமக்கு கற்​றுத் தந்​திருக்​கிறது.

இன்​றைய இந்​தி​யா, கடந்த 1975-ம் ஆண்டு இந்​தியா கிடை​யாது. இப்​போது நமது நாடு மிக​வும் வலு​வாக, வளமாக இருக்​கிறது. நாட்டின் சுதந்​திரம் செழித்​தோங்கி வளர்ந்து வரு​கிறது. கடந்த 1975-ம் ஆண்​டில் அமல்​படுத்​தப்​பட்ட அவசர நிலை, இந்​தி​யா​வின் கருப்பு அத்​தி​யா​யம் ஆகும். இதில் இருந்து நாம் பல்​வேறு பாடங்​களை கற்​றுக் கொண்​டிருக்​கிறோம். எந்த சூழலிலும் ஜனநாயகத்துக்கு பாதிப்பு ஏற்பட அனு​ம​திக்​கக்​கூ​டாது. அடக்​கு​முறைக்கு எதி​ராக வீர​மாக, தீர​மாகப் போரிட வேண்​டும். இவ்வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

கேரளா​வில் தற்​போது மார்க்​சிஸ்ட் தலை​மையி​லான இடது ஜனநாயக முன்​னணி ஆட்சி நடத்தி வருகிறது. வரும் 2026-ம் ஆண்​டில் அந்த மாநிலத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. பேர​வைத் தேர்​தலில் ஆளும் மார்க்​சிஸ்ட், பிர​தான எதிர்க்​கட்​சி​யான காங்​கிரஸுக்கு இடையே கடும் போட்டி நில​வும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இப்​போதே காங்​கிரஸ் கட்​சி​யில் முதல்​வர் வேட்​பாளர் பதவிக்கு பலரும் போட்​டி​யிடு​கின்​றனர். திரு​வனந்​த​புரம் எம்பி சசி தரூர் முதல்​வர் வேட்​பாள​ராக போட்​டி​யிட விரும்​பு​கிறார். ஆனால் கேரள காங்​கிரஸ் தலை​வர்​கள் அவருக்கு எதி​ராக போர்க்​ கொடி உயர்த்தி வரு​கின்​றனர். இந்த சூழலில் அண்​மைக்​கால​மாக சசி தரூர், காங்​கிரஸை விமர்​சித்​தும் பிரதமர் நரேந்​திர மோடியை புகழ்ந்​தும் பேசி வரு​கிறார்.

தேர்​தல் நேரத்​தில் அவர் அணி மாறக்​கூடும் என்று அரசி​யல் விமர்​சகர்​கள் கூறி வரு​கின்​றனர். இதுகுறித்து காங்​கிரஸ் மூத்த தலை​வர் முரளிதரன் கூறும்​போது, "சசி தரூர் எந்த கட்​சியை சேர்ந்​தவர் என்​பதை தெளிவுபடுத்த வேண்​டும். கேரள காங்​கிரஸில் முதல்​வர் பதவிக்​கு தகு​தி​யானவர்​கள்​ பலர்​ உள்​ளனர்​” என்​று தெரி​வித்​துள்​ளார்​.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory