» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கார் டயரில் சிக்கி தொண்டர் பலி: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்கு பதிவு!

திங்கள் 23, ஜூன் 2025 12:21:25 PM (IST)

ஆந்திராவில் கார் டயரில் சிக்கி தொண்டர் உயிரிழந்த சம்பவத்தில் முன்னாள் முதல்வர்  ஜெகன் மோகன் ரெட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் கார் கான்வாயில் ஏற்பட்ட விபத்தில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர் செலி சிங்கையா (62) என்பவர் உயிரிழந்தார். 

இந்த சம்பவம் கடந்த ஜூன் 18ம் தேதி அன்று குண்டூர் மாவட்டத்தில் உள்ள எடுகூரு கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாக பரவியது. இதனையடுத்து, போலீசார் ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டிரைவர் ரமண ரெட்டி என்பவரை கைது செய்தனர். மேலும் ஜெகன் மோகன் ரெட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்

ஜெகன் மோகன் ரெட்டியின் தனி உதவியாளர் கே.நாகேஷ்வர் ரெட்டி, ஒய்.வி.சுப்பாரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னி வெங்கடராமையா, முன்னாள் அமைச்சர் விடடலா ரஜினி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உரிய நடைமுறை மற்றும் பொருந்தக்கூடிய சட்ட விதிகளின்படி சட்ட நடவடிக்கை தொடரும் என்று எஸ்.பி. குமார் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital

New Shape Tailors





Thoothukudi Business Directory