» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

யோகா, உலக அமைதிக்கான வழியை காட்டுகிறது: பிரதமர் மோடி பேச்சு

சனி 21, ஜூன் 2025 10:17:28 AM (IST)



யோகா உலக அமைதிக்கான வழியை காட்டுகிறது என்று சர்வதேச யோகா தினவிழாவில் பிரதமர் மோடி பேசினார்.

11வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாப்படுகிறது. ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற கருப்பொருளில் உலகில் உள்ள 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிலையில், ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட யோகா பயிற்சி நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்டு யோகாசனம் செய்த பிரதமர் மோடி, அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது; உலக மக்களின் அன்றாட அங்கமாக யோகா மாறியுள்ளது. யோகா உலகத்துடன் ஒற்றுமையை நோக்கிய பயணத்தில் நம்மை வழிநடத்துகிறது. மேலும் நாம் தனிமைப்படுத்தப்பட்ட தனிநபர்கள் அல்ல, இயற்கையின் ஒரு பகுதி என்பதை நமக்குக் கற்பிக்கிறது.

நவீன ஆராய்ச்சி மூலம் இந்தியா யோகா அறிவியலை மேம்படுத்துகிறது. யோகா துறையில் ஆதார அடிப்படையிலான சிகிச்சையையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம். டெல்லி எய்ம்ஸ் இந்த விஷயத்தில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. இதயம் மற்றும் நரம்பியல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதில் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும், பெண்களின் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்திலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் அதன் ஆராய்ச்சி காட்டுகிறது.

இன்று முழு உலகமும் சில பதற்றங்கள், அமைதியின்மை மற்றும் பல பகுதிகளில் உறுதியற்ற தன்மை அதிகரித்து வருகிறது. யோகா உலக அமைதிக்கான வழியை காட்டுகிறது. மனதை ஆசுவாசப்படுத்த, சமாதானப்படுத்த யோகா உதவுகிறது. யோகாவை நாம் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவோம்." இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education





New Shape Tailors



Thoothukudi Business Directory