» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கச்சா எண்ணெய் விலை குறித்து தேவையற்ற கவலை வேண்டாம்: பெட்ரோலியத்துறை அமைச்சர்
வெள்ளி 20, ஜூன் 2025 12:06:15 PM (IST)
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது'' என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறினார்.
ஈரான்- இஸ்ரேல் மோதல் ஒருவரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்துக்கொண்டே வருவதால், கச்சா எண்ணெய் விலை உயரக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது. இந்த சூழலில், கச்சா எண்ணெய் விலை உயருமா என்ற கேள்விக்கு, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அளித்த பதில் வருமாறு;கச்சா எண்ணெய் விலை நிலையாக, சமாளிக்கக் கூடியதாக உள்ளது. உலகளாவிய எரிசக்தி விலை கட்டுப்பாட்டில் இருக்கிறது. உலகில் எண்ணெய் பற்றாக்குறை இல்லை. நாங்கள் நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். மத்திய கிழக்கில் மோதல் தொடங்கிய போது, கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 100 டாலர் தாண்டுமோ என கவலை எழுந்தது.
இருப்பினும், கடந்த சில மாதங்களாக, கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது. அமெரிக்கா, கனடா போன்ற மேற்கத்திய நாடுகளிலிருந்து அதிக எண்ணெய் சந்தைக்கு வருகிறது. இஸ்ரேல்-ஈரான் மோதலில் வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டேங்கர்கள் இதுவரை குறிவைக்கப்படவில்லை என்பதால் தான் தேவையற்ற கவலை வேண்டாம்" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பா.ஜ.க.வுடன் இணைந்து தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
திங்கள் 15, டிசம்பர் 2025 10:08:42 AM (IST)

இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது: 2,000+ விமானங்கள் இயக்கம்!
சனி 13, டிசம்பர் 2025 5:42:25 PM (IST)

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: விசாரணை நடத்த மம்தா உத்தரவு
சனி 13, டிசம்பர் 2025 4:35:33 PM (IST)

திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
சனி 13, டிசம்பர் 2025 4:19:29 PM (IST)

கேரளத்தில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 6பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!
சனி 13, டிசம்பர் 2025 11:17:40 AM (IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!
சனி 13, டிசம்பர் 2025 10:51:14 AM (IST)










