» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காருக்குள் விளையாடிய 4 குழந்தைகள் மூச்சு திணறி உயிரிழப்பு: ஆந்திராவில் சோகம்!
திங்கள் 19, மே 2025 11:25:47 AM (IST)

ஆந்திராவில் காருக்குள் விளையாடி கொண்டிருந்தபோது திடீரென கதவு மூடப்பட்டதால் மூச்சு திணறி 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் காருக்குள் அமர்ந்து குழந்தைகள் 4 பேர் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று கதவு மூடிக் கொண்டு திறக்க முடியாததால் 4 பேரும் உயிரிழந்தனர். 10 வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகளும் நீண்ட நேரம் காருக்குள் சிக்கி, மூச்சு திணறி உயிரிழந்தனர்.
நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால், அவர்களின் பெற்றோர் அவர்களைத் தேடத் தொடங்கினர். அப்போது குழந்தைகள் காருக்குள் சிக்கி மூச்சு திணறி உயிரிழந்ததை அறிந்து, அதிர்ச்சியில் உறைந்தனர். அதேபோல், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் மழைநீர் நிரம்பிய குழியில் மூன்று குழந்தைகள் மூழ்கி இறந்தனர். இறந்தவர்கள் ஷாலினி, 5, அஸ்வின், 6, மற்றும் கவுதமி, 8 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பா.ஜ.க.வுடன் இணைந்து தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
திங்கள் 15, டிசம்பர் 2025 10:08:42 AM (IST)

இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது: 2,000+ விமானங்கள் இயக்கம்!
சனி 13, டிசம்பர் 2025 5:42:25 PM (IST)

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: விசாரணை நடத்த மம்தா உத்தரவு
சனி 13, டிசம்பர் 2025 4:35:33 PM (IST)

திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
சனி 13, டிசம்பர் 2025 4:19:29 PM (IST)

கேரளத்தில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 6பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!
சனி 13, டிசம்பர் 2025 11:17:40 AM (IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!
சனி 13, டிசம்பர் 2025 10:51:14 AM (IST)










