» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்திய அரசு அறிவித்த குழுவில் சசி தரூர் பெயர் இடம்பெற்றது நேர்மையற்றது: ஜெய்ராம் ரமேஷ்

சனி 17, மே 2025 4:49:28 PM (IST)



பாகிஸ்தானில் இருந்து வெளிப்படும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று விளக்கம் அளிப்பதற்கு மத்திய அரசு எம்.பி.க்கள் அடங்கிய குழுக்களை அறிவித்துள்ளது.

இந்த குழுவை அமைப்பதற்கு முன்னதாக எம்.பி.க்கள் பெயரை வழங்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதனடிப்படையில் காங்கிரஸ் கட்சி 4 எம்.பி.க்கள் பெயரை வழங்கியுள்ளது. ஆனால் இன்று குழுக்கள் அமைக்கப்பட்டு அதில் இடம் பிடித்துள்ளவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான ஜெய்ராம் ரமேஷ், நாங்கள் கொடுத்த பெயரை தவிர்த்துவிட்டு மற்றொரு பெயரை அறிவித்துள்ளது நேர்மையற்றது எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: எங்களிடம் பெயர் கேட்கப்பட்டது. நாங்கள் கொடுத்த பெயர் குழுவில் இடம் பெறும் என எதிர்பார்த்தோம். கட்சியினால் கொடுத்த பெயர்கள் இடம்பெறும் என்று நம்பினோம். ஆனால், PIB வெளியிட்ட அறிக்கையை நாங்கள் பார்க்கும்போது, ஆச்சர்யம் அடைந்தோம். இப்போது என்ன நடக்கும் என்பதை என்னால் சொல்ல முடியாது.

நான்கு பெயர் கேட்கப்பட்டு, நான்கு பெயர் கொடுக்கப்பட்டது. ஆனால் மற்றொரு பெயரை அறிவிப்பது அரசு தரப்பில் நேர்மையற்றது. அரசு முன்னதாக முடிவு செய்திருந்தாலும் கூட கிரண் ரிஜிஜு, ராகுல் காந்தி மற்றும் கார்கேயிடம் பேசியிருக்கலாம். நாங்கள் எங்களுடைய நான்கு பெயர்களை மாற்றப்போவதில்லை. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆனந்த் சர்மா, கவுரவ் கோகாய், ராஜா பரார் மற்றும் நாசர் ஹுசைன் ஆகிய நான்கு எம்.பி.கள் பெயரை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory