» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாகிஸ்தானுக்கு நிதி அளிப்பது பயங்கரவாதத்துக்கு மறைமுக ஆதரவுக்கு சமம்: ராஜ்நாத் சிங்

சனி 17, மே 2025 12:03:28 PM (IST)



பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் எந்தவொரு நிதியுதவியும், பயங்கரவாதத்துக்கு அளிக்கப்படும் மறைமுக ஆதரவுக்கு சமம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்கும் முடிவை, ஐ.எம்.எப்., எனப்படும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். நம் ராணுவத்தால் அழிக்கப்பட்ட பயங்கரவாத உட்கட்டமைப்புகளை மீண்டும் கட்டி எழுப்ப இந்த நிதி பயன்படுத்தப்படலாம். அந்நாட்டுக்கு அளிக்கப்படும் எந்தவொரு நிதியும் பயங்கரவாதத்துக்கான மறைமுக ஆதரவுக்கு சமம்,'' என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பட்டார்.

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் விமானப்படை தளத்திற்கு, ராஜ்நாத் சிங் சென்றார். பாகிஸ்தான் ராணுவத்தால் குறிவைக்கப்பட்ட விமானப்படை தளங்களில் இதுவும் ஒன்று. புஜ் விமானப்படை தளத்தில், வீரர்களிடையே ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஆப்பரேஷன் சிந்துார் இன்னும் முடியவில்லை. தற்போதைய போர் நிறுத்தம் என்பது, பாகிஸ்தானுக்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு சோதனை. மோசமான நடவடிக்கைகளை அந்நாடு மாற்றிக் கொண்டால் நல்லது. இல்லை என்றால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

பாகிஸ்தானுக்கு நாம் யாரென்று நிரூபித்து விட்டோம். அந்நாடு இனியும் வாலாட்ட முடியாது. பாகிஸ்தானுக்கு எதிரான நம் நடவடிக்கைகள், வெறும் 'டிரெய்லர்' தான். தேவைப்பட்டால், முழு படத்தையும் காண்பிப்போம். பயங்கரவாதத்தை ஒழிப்பது தான், புதிய இந்தியாவின் நோக்கம்.

ஐ.நா.,வால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஜெய்ஷ் - இ - முகமது தலைவர் மசூத் அசாருக்கு, 14 கோடி ரூபாய் வழங்குவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அதாவது, நம் ராணுவத்தினரால், முரித்கே, பஹவல்பூர் ஆகிய இடங்களில் அழிக்கப்பட்ட பயங்கரவாத உட்கட்டமைப்பை மீண்டும் கட்டி எழுப்ப, இந்த நிதியுதவியை பாகிஸ்தான் அரசு வழங்குகிறது.

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிக்கும் பாகிஸ்தானுக்கு, ஐ.எம்.எப்., எந்த உதவியும் செய்யக் கூடாது. அந்நாட்டுக்கு, 8,350 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க ஒப்புக்கொண்டது குறித்து, ஐ.எம்.எப்., மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த நிதியுதவி, பயங்கரவாத உட்கட்டமைப்புக்கு பயன்படுத்தப்படலாம். எதிர்காலத்தில், பாகிஸ்தானுக்கு ஐ.எம்.எப்., எந்த உதவியும் செய்யக் கூடாது. பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் எந்தவொரு நிதியுதவியும், பயங்கரவாதத்துக்கு அளிக்கப்படும் மறைமுக ஆதரவுக்கு சமம். இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory