» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காஷ்மீரில் வெள்ளம், நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக உயர்வு: மீட்பு பணிகள் தீவிரம்

திங்கள் 21, ஏப்ரல் 2025 11:04:40 AM (IST)

காஷ்மீரில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் மேகவெடிப்பு காரணமாக கடந்த சனிக்கிழமை இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள ஜம்பா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழை காரணமாக நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில், 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும், சாலைகள் முற்றிலும் சேதமடைந்தன.

வெள்ளம், நிலச்சரிவில் 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த சம்பவத்தில் ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. கனமழை, வெள்ளத்தால் ரைசி மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இரு மாவட்டங்களிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory