» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உரிய பதில் கிடைக்கும் வரையில் தொடர்ந்து போராடுவோம் : கனிமொழி எம்.பி. உறுதி
வியாழன் 20, மார்ச் 2025 5:49:44 PM (IST)

"தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக உரிய பதில் கிடைக்கும் வரையில் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் போராடுவோம்" என்று திமுக எம்.பி. கனிமொழி கூறினார்.
'தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்' என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட் அணிந்து அவைக்கு சென்றது குறித்து திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவர் கனிமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ஆளுங்கட்சியினர் தங்கள் கருத்துகள், நம்பிக்கைகள் அடங்கிய வாசகங்களை கொண்ட சால்வை, மாஸ்க்கை அவைக்கு அணிந்து வரும்போது, அதை யாரும் எதுவும் சொல்வதில்லை; தமிழ்நாட்டு உறுப்பினர்கள் அவ்வாறு வாசகம் அடங்கிய உடையை அணிந்து வந்தால் மட்டும், அதை மாற்ற வேண்டுமென சபாநாயகர் அறிவுறுத்துகிறார்.
இதற்கு முன் எத்தனையோ உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு வாசகம் பொறித்த முகக் கவசங்களை அணிந்து வந்திருக்கிறார்கள். சபாநாயகரின் உத்தரவு ஜனநாயகத்துக்கு விரோதமான செயலாகவே உள்ளது. தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த கோரிக்கை வைத்து வருகிறோம்; ஆனால் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. உரிய பதில் கிடைக்கும் வரையில் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் போராடுவோம். எதிர்க்கட்சிகளே இல்லாமல் அவையை நடத்த வேண்டும் என மனநிலையில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பீகாரில் பிரசாந்த் கிஷோர் கட்சி படுதோல்வி: 236 தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பு
சனி 15, நவம்பர் 2025 12:19:55 PM (IST)

ஜனநாயகத்தை படுகொலை செய்துவிட்டு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது : காங்கிரஸ் அறிக்கை!
வெள்ளி 14, நவம்பர் 2025 5:52:00 PM (IST)

டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய உமரின் வீடு வெடி வைத்து தகர்ப்பு!
வெள்ளி 14, நவம்பர் 2025 11:08:06 AM (IST)

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை
வெள்ளி 14, நவம்பர் 2025 10:34:51 AM (IST)

எடியூரப்பா மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 13, நவம்பர் 2025 5:34:27 PM (IST)

கோவளம் கடற்கரைக்கு 5-வது முறையாக நீலக்கொடி சான்றிதழ்!
புதன் 12, நவம்பர் 2025 12:25:27 PM (IST)








