» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பா.ஜனதா மகளிர் அணி பொதுச்செயலாளர் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது!
புதன் 12, மார்ச் 2025 11:25:07 AM (IST)
கர்நாடகாவில் பா.ஜனதா மகளிர் அணி பொதுச்செயலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு யஸ்வந்த்புரத்தை சேர்ந்தவர் மஞ்சுளா (42). இவர் கர்நாடக மாநிலம் பா.ஜனதா மகளிர் அணியின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது கணவர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதையடுத்து அவர் கட்சி பணியில் ஈடுபடாமல் விலகி இருந்தார்.இந்நிலையில் மதியம் வீட்டில் தனியாக இருந்த மஞ்சுளா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து யஸ்வந்த்புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த போலீசார் மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எம்.எஸ்.ராமையா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மஞ்சுளா கைப்பட எழுதிய கடிதம் போலீசாருக்கு கிடைத்தது.
அதில் வாழ்க்கையில் பணம், பெயர், புகழ் ஆகியவை தான் முக்கியம் என்று நினைக்கிறோம். ஆனால் அது உண்மை இல்லை. நான் பணம், பெயர், புகழ் சம்பாதித்துவிட்டேன். ஆனால் நிம்மதி இல்லை. கடந்த சில நாட்களாக நான் நிம்மதி இழந்து தவிக்கிறேன் எனது தற்கொலைக்கு வேறு யாரும் காரணம் இல்லை.எனது தற்கொலைக்கு நான் தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த கடித்தை கைப்பற்றிய போலீசார் அதை தடயவியல் ஆய்வு அறிக்கைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள 65 தொகுதிகள்! அமித் ஷாவிடம் பட்டியல் வழங்கிய நயினார்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:02:00 PM (IST)

பா.ஜ.க.வுடன் இணைந்து தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
திங்கள் 15, டிசம்பர் 2025 10:08:42 AM (IST)

இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது: 2,000+ விமானங்கள் இயக்கம்!
சனி 13, டிசம்பர் 2025 5:42:25 PM (IST)

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: விசாரணை நடத்த மம்தா உத்தரவு
சனி 13, டிசம்பர் 2025 4:35:33 PM (IST)

திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
சனி 13, டிசம்பர் 2025 4:19:29 PM (IST)

கேரளத்தில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 6பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!
சனி 13, டிசம்பர் 2025 11:17:40 AM (IST)










