» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தங்ககடத்தல் வழக்கில் கைது: சிறைக்குள் தூங்காமல் தவிக்கும் நடிகை ரன்யாராவ்!

சனி 8, மார்ச் 2025 9:23:16 PM (IST)

தங்க கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள நடிகை ரன்யாராவ் சிறையில் சரியாக சாப்பிடாமல், தூங்காமல் அமைதியை இழந்து விட்டதால் கண்கள் வீங்கி விட்டதாக கூறப்படுகிறது. 

துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்த நடிகை ரன்யாராவ் (32) கடந்த 3-ந் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 14 கிலோ 800 கிராம் தங்கம் பறிமுதல் செய்ய ப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டில் நடந்த சோதனையிலும் பலகோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணம் சிக்கியது.

தங்ககடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யாராவ். கர்நாடக வீட்டுவசதித்துறை இயக்குனரான டி.ஜி.பி. ராமசந்திரா ராவின் வளர்ப்பு மகள் ஆவார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்லும் இவர் டி.ஜி.பியின் மகள் என்பதால் சோதனை நடத்தப்படாமல் வி.ஐ.பி.க்கள் செல்லும் வழியில் சென்றது தெரியவந்தது. மேலும் இவர் கடந்த 1½ ஆண்டுகளாக இந்த தங்க கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதற்காக அவர் லட்சக்கணக்கில் சம்பளமாக பெற்றதும் கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் கோ ர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்ட நடிகை ரன்யாராவ் பெங்க ளூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 14 நாள் சிறையில் அடைக்கப் பட்டார். நடிகை ரன்யாராவ் ஜாமீன் கேட்டு பெங்களூரு பெருளாதார குற்றவியல் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதே போல் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளும் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடந்தது. இதில் நடிகை ரன்யாராவ் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். 

அப்போது நடிகை ரன்யாராவிடம் 3 நாட்கள் விசாரணை நடத்த வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கினார். மேலும் நடிகை ரன்யாராவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 10-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இதையடுத்து நடிகை ரன்யாராவை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

அப்போது நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கில் தன்னை மிரட்டிய அரசியல் பிரமுகர்கள் பற்றி கூறியதாக தெரிகிறது. மேலும் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பிரபல நகை கடை உரிமையாளர்களிடம் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அளித்த பதிலை வாக்குமூலமாக பதிவு செய்தனர். மேலும் தேவைப்படும் போது மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே நடிகை ரன்யாராவ் முகம் வெளிறிப்போய், கண்கள் வீங்கி காணப்படுகிறது. தங்க கடத்தல் வழக்கில் தான் கைதானதால் அவர் சிறையில் சரியாக சாப்பிடாமல், தூங்காமல் அமைதியை இழந்து விட்டதால் கண்கள் வீங்கி விட்டதாக கூறப்படுகிறது. அதே நேரம் நடிகை ரன்யாராவ் சிறையில் தாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இதுகுறித்து கர்நாடக மாநில மகளிர் ஆணைய தலைவர் நாகலட்சுமி சவுத்ரி கூறியதாவது: நடிகை ரன்யாராவ் முகத்தில் காயங்கள் இருப்பது போன்ற படங்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விசாரிக்குமாறு அவர் எங்களுக்கு கடிதம் அனுப்பினால் நாங்கள் அவருக்கு உதவுவோம். இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் மட்டுமே எழுத முடியும். பாதிக்கப்பட்டவர் புகார் செய்தால் மட்டுமே சம்மந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முடியும். சட்டத்தை யாரும் கையில் எடுக்க கூடாது. யாரையும் தாக்க யாருக்கும் உரிமை இல்லை. அது ஒரு பெண்ணாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி. அதை முற்றிலும் நான் எதிர்க்கிறேன் என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory