» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சாவர்க்கர் குறித்து கருத்து: ராகுல் காந்திக்கு ரூ. 200 அபராதம் விதித்த லக்னோ நீதிமன்றம்!
வெள்ளி 7, மார்ச் 2025 12:00:10 PM (IST)
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ரூ. 200 அபராதம் விதித்து லக்னோ மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், அலோகாவில் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம், பாரத் ஜோடோ நடைப்பயணத்தின் போது செய்தியாளர்களுடன் பேசும்போது சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி அவதூறு கருத்து தெரிவித்ததாக லக்னோ மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.தேசியவாதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான சாவர்க்கர் குறித்து திட்டமிட்டு அவதூறு கருத்துகளை ராகுல் காந்தி பரப்பியதாகவும், அந்த பேட்டி ஊடகங்களில் பரவலாக ஒளிபரப்பட்டதாகவும் வழக்கறிஞர் நிர்பேந்திர பாண்டே தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ராகுல் காந்தியை விசாரணைக்கு நேரில் ஆஜராக லக்னோ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வெளிநாட்டு பிரமுகரை சந்திக்க முன்பே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டியுள்ளதால், ராகுல் காந்தி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி அவரது வழக்கறிஞர் மனு அளித்தார்.
இந்த மனுவை நிராகரித்த கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி அலோக் வர்மா, நேரில் ஆஜராக தவறியதற்காக ராகுல் காந்திக்கு ரூ. 200 அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், வழக்கின் விசாரணையை ஏப்ரல் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதே குற்றச்சாட்டில் புனே நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டு, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள 65 தொகுதிகள்! அமித் ஷாவிடம் பட்டியல் வழங்கிய நயினார்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:02:00 PM (IST)

பா.ஜ.க.வுடன் இணைந்து தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
திங்கள் 15, டிசம்பர் 2025 10:08:42 AM (IST)

இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது: 2,000+ விமானங்கள் இயக்கம்!
சனி 13, டிசம்பர் 2025 5:42:25 PM (IST)

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: விசாரணை நடத்த மம்தா உத்தரவு
சனி 13, டிசம்பர் 2025 4:35:33 PM (IST)

திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
சனி 13, டிசம்பர் 2025 4:19:29 PM (IST)

கேரளத்தில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 6பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!
சனி 13, டிசம்பர் 2025 11:17:40 AM (IST)










