» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வளர்ந்த நாடுகளை விட இந்தியாவின் வளர்ச்சி அதிகம் : பிரதமர் மோடி பெருமிதம்

வியாழன் 6, மார்ச் 2025 8:51:54 AM (IST)

இந்தியாவின் வளர்ச்சி பல்ேவறு வளர்ந்த நாடுகளை விட அதிகமாக இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வேலைகளை உருவாக்குதல் தொடர்பான பட்ெஜட்டுக்கு பிந்தைய கருத்தரங்கு ஒன்று டெல்லியில் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை விவரித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: 2015 முதல் 2025-ம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியா 66 சதவீத வளர்ச்சி அடைந்திருப்பதாக, அதாவது 3.8 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டியிருப்பதாக சர்வதேச நிதியம் கூறியிருக்கிறது.

இந்த காலகட்டத்தில் பல வளர்ந்த நாடுகளை விட இந்தியாவின் வளர்ச்சி அதிகமாக உள்ளது. எனவே நாடு 5 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.430 லட்சம் கோடி) பொருளாதாரத்தை எட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. பொருளாதாரத்தை தொடர்ந்து வேகப்படுத்துவதற்கு சரியான திசையில் சரியான முதலீடுகளை செய்ய வேண்டியது முக்கியம் ஆகும்.

இந்த ஆண்டு பட்ஜெட், இந்தியாவின் எதிர்காலத்துக்கான ஒரு வரைபடமாக உள்ளது. உள்கட்டமைப்பு, தொழில்கள், மக்கள், பொருளாதாரம் மற்றும் புதுமை ஆகியவற்றில் முதலீட்டுக்கு சமமாக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளன. திறன் மேம்பாடு மற்றும் திறன் வளர்த்தல் ஆகியவை தேசிய வளர்ச்சிக்கான அடிக்கல்லாகும். இந்த துறைகளில் அடுத்தக்கட்ட வளர்ச்சியும், சிறந்த முதலீடும் அவசியமானது.

‘மக்களில் முதலீடு’ என்ற பார்வை கல்வி, சுகாதாரம் மற்றும் திறன் மேம்பாடு ஆகிய 3 தூண்களை அடிப்படையாக கொண்டது. இந்தியாவின் கல்வி முறை மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது. பிரதமர் ஊக்கத்தொகை திட்டமானது இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் மற்றும் நடைமுறை திறன்களை வழங்குவதற்காக தொடங்கப்பட்டது.

அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவக்கல்வியில் 75,000 இடங்களைச் சேர்க்கும் இலக்குடன் 10,000 கூடுதல் மருத்துவ இடங்களை இந்த பட்ஜெட்டில் அறிவித்தோம். நாட்டின் கடைசி மைல் வரை தரமான சுகாதாரப் பராமரிப்பு சென்றடைவதை உறுதி செய்வதற்காக புற்றுநோய் மையங்களை நிறுவுதல் மற்றும் டிஜிட்டல் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளை அரசு மேற்கொண்டு உள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் வரை பங்களிக்கும் திறன் சுற்றுலாத் துறைக்கு உண்டு. சுற்றுலாவை மையமாகக் கொண்டு நாடு முழுவதும் 50 சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும். இந்த இடங்களில் உள்ள ஓட்டல்களுக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்குவதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்துவதுடன், உள்ளூர் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும்.

இந்தியாவில் குணமாதல் மற்றும் புத்தரின் நிலம் உள்ளிட்ட முயற்சிகள் சர்வதேச சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும். அந்தவகையில் இந்தியாவை சர்வதேச சுற்றுலா மற்றும் நலவாழ்வு மையமாக உருவாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

உலகின் 3-வது பெரிய ஸ்டார்ட்அப் சூழல் அமைப்பை கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது. ஸ்டார்ட்அப்-களை ஊக்குவிப்பதற்காக ஏராளமான நடவடிக்கைகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இது இந்த துறையில் முதலீடுகளை அதிகரிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory