» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனது தனிப்பட்ட விருப்பம் : டி.கே.சிவக்குமார்

வெள்ளி 28, பிப்ரவரி 2025 12:37:34 PM (IST)



கோவை ஈஷா சிவராத்திரி விழாவில் நான் பங்கேற்றதில் அரசியல் இல்லை கர்நாடக துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறினார்.

கோவை ஈஷா யோகா மையத்தில் 31-வது ஆண்டு மகா சிவராத்திரி விழா நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கவர்னர்கள் ஹரிபாபு கம்பம்பதி (ஒடிசா), குலாப் சந்த் கட்டாரியா (பஞ்சாப்), கர்நாடக மாநில துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவக்குமார், மத்திய அமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் சந்தானம், நடிகைகள் தமன்னா, நிக்கி கல்ராணி மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், ஈஷா சிவராத்திரி விழாவில் பங்கேற்றது குறித்து துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- கோவை ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டதை வைத்து பலர் தங்களின் கருத்துக்களை கூறி வருகிறார்கள். எனக்கு நம்பிக்கை உள்ள இடத்திற்கு நான் செல்கிறேன். காங்கிரஸ் அனைவரையும் அரவணைத்து செல்கிறது. ஈஷா மையத்திற்கு நான்சென்றதில் அரசியல் இல்லை. மதத்தில் அரசியலை கலக்கக்கூடாது.

நான் எனது தனிப்பட்ட நம்பிக்கை காரணமாக ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இதுகுறித்து விமர்சிப்பவர்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாது. நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். எனது மதத்தை நேசிக்கிறேன். நாடாளுமன்றத்தில் மூன்றில் 2 பங்கு மெஜாரிட்டி இருந்தால் தான் தொகுதி மறுவரையறை செய்ய முடியும். ஆனால், மத்தியில் தற்போது உள்ள அரசுக்கு அத்தகைய மெஜாரிட்டி இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory