» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நடிகை விஜயலட்சுமி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு
வியாழன் 27, பிப்ரவரி 2025 12:50:18 PM (IST)
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடலுறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை கடந்த 17-ந்தேதி விசாரித்த நீதிபதி, கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், இந்த வழக்கை 12 வாரத்துக்குள் போலீசார் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதற்கிடையே உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அந்த மனுவில், 'இந்த விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும், அனைத்து அம்சங்களையும் முறையாக கருத்தில் கொள்ளவில்லை. தன் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்துசெய்ய வேண்டும். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பு கூறும் வரையில், 12 வாரங்களுக்குள் புலன்விசாரணையை போலீசார் நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என கூறப்பட்டு உள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள 65 தொகுதிகள்! அமித் ஷாவிடம் பட்டியல் வழங்கிய நயினார்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:02:00 PM (IST)

பா.ஜ.க.வுடன் இணைந்து தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
திங்கள் 15, டிசம்பர் 2025 10:08:42 AM (IST)

இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது: 2,000+ விமானங்கள் இயக்கம்!
சனி 13, டிசம்பர் 2025 5:42:25 PM (IST)

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: விசாரணை நடத்த மம்தா உத்தரவு
சனி 13, டிசம்பர் 2025 4:35:33 PM (IST)

திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
சனி 13, டிசம்பர் 2025 4:19:29 PM (IST)

கேரளத்தில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 6பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!
சனி 13, டிசம்பர் 2025 11:17:40 AM (IST)










