» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அனைத்து பள்ளிகளிலும் தெலுங்குப் பாடம் கட்டாயம்: தெலங்கானா அரசு உத்தரவு!
புதன் 26, பிப்ரவரி 2025 12:07:02 PM (IST)
தெலங்கானாவில் வருகின்ற 2025 -26 கல்வியாண்டு முதல் அனைத்து விதமான பள்ளிகளிலும் தெலுங்கு மொழிப் பாடம் கட்டாயம் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழிப் பாடம் கட்டாயமாக்கி சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால், முறையாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது.இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிப் பிரச்னை தீவிரமடைந்துள்ள சூழலில், தெலுங்கு மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்கி மாநில கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. வருகின்ற 2025 -26 கல்வியாண்டு முதல் தெலுங்கானா மாநிலத்தில் செயல்படு சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி உள்பட அனைத்து பாடத்திட்டங்களில் இயங்கும் பள்ளிகளிலும் தெலுங்கு கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
1 முதல் 10ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தெலுங்கு கற்க வேண்டும் எனவும், வெளி மாநில மாணவர்கள் தெலுங்கு மொழியைக் கற்றுக் கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களை மாற்றி அமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள 65 தொகுதிகள்! அமித் ஷாவிடம் பட்டியல் வழங்கிய நயினார்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:02:00 PM (IST)

பா.ஜ.க.வுடன் இணைந்து தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
திங்கள் 15, டிசம்பர் 2025 10:08:42 AM (IST)

இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது: 2,000+ விமானங்கள் இயக்கம்!
சனி 13, டிசம்பர் 2025 5:42:25 PM (IST)

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: விசாரணை நடத்த மம்தா உத்தரவு
சனி 13, டிசம்பர் 2025 4:35:33 PM (IST)

திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
சனி 13, டிசம்பர் 2025 4:19:29 PM (IST)

கேரளத்தில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 6பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!
சனி 13, டிசம்பர் 2025 11:17:40 AM (IST)










