» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மகா சிவராத்திரி: குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து!
புதன் 26, பிப்ரவரி 2025 12:00:21 PM (IST)
மகா சிவராத்திரி தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா இன்றிரவு கொண்டாடப்படவுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: "மகா சிவராத்திரி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் மகாதேவரின் ஆசீர்வாதம் நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்றும், நமது நாடு முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து முன்னேற வேண்டுமென்றும் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: "இந்த புனித நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். இந்த தெய்வீக நாள், உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கட்டும். அதே போல் வளர்ந்த இந்தியாவின் உறுதியை வலுப்படுத்தட்டும். ஹரஹர மகாதேவ்” எனப் பதிவிட்டுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: ”மகா சிவராத்திரி திருநாளில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். சிவசக்தியின் ஆசிகள் எப்போதும் உங்கள் மீது நிலைத்திருக்கட்டும். ஹரஹர மகாதேவ்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள 65 தொகுதிகள்! அமித் ஷாவிடம் பட்டியல் வழங்கிய நயினார்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:02:00 PM (IST)

பா.ஜ.க.வுடன் இணைந்து தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
திங்கள் 15, டிசம்பர் 2025 10:08:42 AM (IST)

இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது: 2,000+ விமானங்கள் இயக்கம்!
சனி 13, டிசம்பர் 2025 5:42:25 PM (IST)

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: விசாரணை நடத்த மம்தா உத்தரவு
சனி 13, டிசம்பர் 2025 4:35:33 PM (IST)

திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
சனி 13, டிசம்பர் 2025 4:19:29 PM (IST)

கேரளத்தில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 6பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!
சனி 13, டிசம்பர் 2025 11:17:40 AM (IST)










